Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் நாளை ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கூ‌ட்ட‌‌ம்!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (13:16 IST)
சென்னை தலைமை செயலக‌த்த‌ி‌ல் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் நாளை மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌‌ர்க‌ள ், காவ‌‌‌ல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூ‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில ், முதலம ைச்சர் கருணாநிதி தலைமையில் மாவட்ட ஆ‌‌ட்‌‌சி‌த் தலைவ‌ர்க‌ள ், காவ‌ல்துறை அதிகாரிகள் மாநாடு, நாள ையு‌ம் (19ஆ‌ம் தே‌தி) நாளை மறுநா‌ளு‌ம் (20ஆ‌ம் தே‌தி) சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் கருணாநிதியின் தலைமை உரையுடன் மாநாடு நாளை தொடங்கி வைக்கப்படும். மாவட்ட ஆ‌‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள ், காவ‌ல்துறை அதிகாரிகள் இடையே நடக்கும் கூட்டு மாநாட்டில், சட்டம்-ஒழுங்கு பற்றி டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி., மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.கள், காவ‌ல்துறை சூப்பிரண்டுகள் மற்றும் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெறும்.

20 ஆ‌ம் த ேதி அன்று நடக்கும் 2ஆம் நாள் மாநாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் ஆகியோர் விவாதிப்பார்கள். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌‌ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments