Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. அரசை‌க் க‌ண்டி‌த்து சேல‌த்‌தி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2008 (17:54 IST)
‌ தி.மு.க. அரசை‌க் க‌‌ண்டி‌த்து‌ம் மக்கள் மீது நிதிச் சுமையைத் திணிக்கும் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் நாளை சேல‌த்‌தி‌ல் ஆ‌ர்‌ப்ப‌ா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ.இ. அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌‌றி‌த்து அவ‌ர் ௦ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சேலம் மாநகராட்ச ி 2007-2008 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், சேலம் மாநகர் கிச்சிப்பாளையத்தில் உள்ள குப்பைமேடு கெட்டிச்சாவடிக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள ் இதுவரை சேலம் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவில்லை. கிச்சிப்பாளையம் குப்பைமேடு அகற்றப்படாததால் அந்தப் பகுதி நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், மலேரியா, சிக்குன்குனியா மற்றும் தோல் நோய்களினால் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதே போல, பனைமரத்துப்பட்டி ஏரி சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பனைமரத்துப்பட்டி ஏரி குடிநீர் வழங்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படும் என்றும், மின்சாரக் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்வதைக ் கருத்தில் கொண்டு, மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் மின்சார அளவுக்கு ஈடாக காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சேலம் மாநகராட்சியால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் காகித வடிவிலேயே தற்போதும் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எந்தத் திட்டமு‌ம் நடைமுறை‌க்கு வராத ‌நிலை‌யி‌ல், குடிநீர் வைப்புத ் தொகையை 5,000 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாகவும், குடிநீர் கட்டணத்தை 101 ரூபாயில் இருந்து 151 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளதுட‌ன் வீடுகளுக்கான வரி மறுசீராய்வு என்ற போர்வையில் வீட்டு வரியை உயர்த்தும் நடவடிக்கை‌யிலு‌ம் மாநகரா‌ட்‌சி ஈடுப‌ட்டு‌ள்ளதாக சேலம் மாநகர மக்கள் புகார் தெரிவி‌க்‌கி‌ன்றனர்.

சேலம் மாநகர மக்களின் மேற்படி நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மக்களுக்குத் தேவையான பயனளிக்கும் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கில் இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்கள் மீது நிதிச் சுமையைத் திணிக்கும் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் சேலம் மாநகராட்சி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments