Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தி அருகே கரடி கடித்து இருவ‌ர் காய‌ம்!

வேலு‌ச்சா‌மி

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (11:46 IST)
சத்தியமங்கலம் வனப்பகுத ி‌க்கு மாடுமேய்க்க சென்ற இருவரை கரடி கடித்து குதறியது.

ஈரோடு மாவட்டம ், சத்தியமங்கலம் அடுத்துள்ளது ராமப யல ூர்தொட்டி. இங்கு வசிப்பவர்கள் மாரி (55), அம்பியன் (45), மாதையன் (42), ஜடையன் (45). இவர்கள் நான்கு பேரும் அருகில் உள்ள கல்முக்கை வனப்பகுதிக்கு தங்கள் மாடுகளை மேய்க்க சென்றுள்ளனர். மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தபோது இவர்கள் நான்குபேரும் அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் உட்காந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அருகே இருந்த புதரில் இருந்து திடீரென ஒரு கரடி வந்தது. இந்த கரடி நான்கு பேரையும் துரத்தி, துரத்தி தாக்க தொடங்கியது. அப்போது ஜடையன் மற்றும் மாதையன் இருவரும் ஓடிவிட்டனர்.

ஆனால் மாரியும் அம்பியனும் கரடியிடம் சிக்கினர். இதில் இருவ‌ரி‌ன் முக‌ம், க ா‌லிலு‌ம் படுபல‌‌த்த காய‌ம் ஏ‌ற்ப‌ட்டது. இதை‌யடு‌த்து மாதையனும், ஜடையனும் கரடி க‌ல்லா‌ல் எ‌றி‌ந்து க ாட்டுக்குள் ‌ வி‌‌ட்டின‌ர்.

ப‌ல‌த்த காய‌ம் அடை‌ந்த இருவர ையு‌ம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments