Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக‌த்த‌ி‌‌ல் சமைய‌ல் எ‌ரிவாயு ரூ.30 குறைப்பு: கருணாநிதி!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (11:38 IST)
'' ஒரு சமைய‌ல ் எ‌ரிவாய ு இணைப்பு மட்டுமே வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 30 ரூபாய ை தமிழக அரசே ஏற்கும ்'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

கடலூரில் 2 நாள்கள் நடைபெற்ற தி.மு.க. மகளிரணி மாநில மாநாட்டை நிறைவு செய்து ‌த ி. ம ு.க. தலைவரு‌ம ், முதலமை‌ச்சருமா ன கருணாநிதி பேசுகை‌யி‌ல ், இந்த மாநாட்டு நிறைவு விழாவுக்கு வருவதற்கு முன்பு நிதித்துறைச் செயலரிடம் பேசினேன். நமது மகளிரணியினர் சமையல் எ‌ரிவாய ு விலையைக் குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்தும், விலை குறைப்பது குறித்தும் விவாதித்தோம்.

அண்மையில் மத்திய அரசு, மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சமையல் எ‌ரிவாய ு விலையை உருளைக்கு ரூ.50 உயர்த்தியுள்ளது. தற்போது ஒர ு எ‌ரிவாய ு இணைப்பு மட்டும் பெற்றுள்ள 50 லட்சம் ஏழை, நடுத்தர குடும்பங்கள் பயனடையும் வகையில் எ‌ரிவாய ு ஒன்றுக்கு ரூ.30 அரசே ஏற்றுக்கொள்ளும். இதன் மூலம் இந்த ஏழை, நடுத்தர குடும்பங்கள் தற்போது 20 ரூபாய ை மட்டும் கூடுதலாகச் செலுத்தி சமைய‌ல ் எ‌ரிவாய ை பெற்றுக்கொள்ளலாம்.

மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்தத் தொகையை அரசே நேரடியாக வழங்கும். நம்முடைய மகளிரணியினரால் இப்படிப்பட்ட மகத்தான மாநாட்டை நடத்திக் காட்ட முடியுமா என்று நான் நினைத்தேன். இந்த விஷயத்தில் நான் தோற்றுவிட்டேன் என்பதில் வெட்கப்படவில்லை; பெருமையடைகிறேன்.

தமிழன் தமிழினத்துக்காக தலைநிமிர தன்னுடைய பண்பாட்டை உயிர்ப்பிக்க வேண்டும். இந்த மாநாட்டின் மூலம் நமது பண்பாட்டைப் புதுப்பிக்கவும் உயிர்ப்பிக்கவும் சூளூரை மேற்கொள்வோம் என்ற ு கருணாநிதி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments