ஈரோடு மாவட்டம் ஆ சன ூர் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் அன ைத்தும் காட்டாறாக மாறி கர்நாடகா அணையில் கலக்கிறது. தமிழக மக்களுக்கு பயன்படுமாறு இந்த தண்ணீரை திருப்பி விட அரசு நடவடிக்கை எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளத ு.
இந்தியா நாடு விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடாகும். இங்கு வசிக்கும் மக்களின் பெரும்பான்மையினர் விவசாயத்தை அடிப்படையாக கொண்டே வாழ்ந்து வருகின்றனர். இப்படி முக்கி யத ்துவம் பெற்ற விவசாயத்திற்கு தண்ணீர் என்பதுதான் அடிப்படை மூலதனம். இந்த தண்ணீர் என்பது இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான சொத்தாக இருந்திருந்தால் மாநிலங்கள் வெகுவாக உயர்ந்திருக்கும்.
ஆனால் நாடாளும் அரசியல்வாதிகள் ஆரம்பகாலத்தில் நதிகளை பேச்சில் மட்டும் தேசியமயமாக்கப்படும் என கூறி அந்தந்த மாநிலங்கள் உரிமை கொண்டாட வலிவகுத்தது. பல்வேறு மாநிலங்களில் அரசியல் ஆயு தமே அண்டை மாநிலத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதுதான்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் கர்நாடகா மாநிலத்திற்கும் நமக்கும் காவிரி நதிநீர் பிரச்சனை, கேரளாவிற்கும் நமக்கும் முல்லை, பெரியார் அணை பிரச்சனை, ஆந்திராவிற்கும் நமக்கும் கிருஷ்ணா நீர் பிரச்சனை இப்படி முக்கிய பிரச்சனைகளே தண்ணீரை அடிப்படையாக கொண்டுதான் நடந்து வருகிறது. தற்போதுகூட ந ிதி ஒதுக்கி பணி தொடங்கும் தருவாயில் கர்நாடகா அரசியல்வாதிகள் தற்போது நடந்து முடிந்த தேர்தலுக்காக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் பிரச்சனையை வாக்கு சேகரிக்கும் ஆயுதமாக எடுத்து தேர்தலில் வென்றுள்ளனர்.
webdunia photo
WD
இப்படி அண்டை மாநிலத்தினர் நமக்கு ஒரு கனஅடி தண்ணீர்கூட கொடுக்க மறுக்கும் நிலையில் தமிழகத்தில் உற்பத்தியாகும் தண்ணீரை கர்நாடகா மாநிலத்திற்கு தாரைவார்த்து கொடுக்கும் நிலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதி ஆ சன ூர் வனப்பகுதியில் நடந்து வருகிறது.
webdunia photo
WD
ஆம்..துள்ளியோடும் மான்கள், தோகைவிரித்தாடும் மயில்கள், பாடித்திரியும் குயில்கள், வனமே அதிரும்படி பிளிரி ஓடும் யானை கூட்டம், பார ்த ்தாலே பயம் ஏற்படுத்தும் காட்டெருமைகள், இடியே விழுந்தாலும் இமையளவுகூட பயக்காமல் நடந்து செல்லும் சிறுத்தைகள் அவைகளை ரசித்தபடி செல்லும் புலி இவைகளை கண்டு பயந்தும் பயக்காதபடி நடமாடும் கரடி இப்படி வனவிலங்குகளின் புகழிடமாக விளங்குவதுதான் சத்தியமங்கலம் வனப்பகுதி.
இதன் உச்சியில் கடல்மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்தில் மகுடமாய் அமைந்திருக்கும் பகுதிதான் குட்டிகொடைக்கானல் என்று அழைக்கப்படும் திம்பம், ஆ சன ூர் மலைப்பகுதி. இதை சுற்றிலும் வனங்களால் சூழப்பட்டு எப்போதும் ரம்மியாக பனி மூட்டங்கள் பாட்டுபாடி சென்றுகொண்டிருக்கும் தட்பவெப்பம்.
பெரும்பாலும் இங்கு எப்போதும் மழை பெய்துகொண்டே இருக்கும். இதன் காரணமாக இந்த வனப்பகுதியில் இருக்கும் அனைத்து ஓடைகளிலும் தண்ணீர் சல...சல என்ற சங்கீத சத்தத்துடன் ரம்மியமாய் சென்றுகொண்டு இருக்கும். வனவிலங்குகளின் வாழ்க்கைக்கு முக்கி யத ்துவமாக இருக்கும் இந்த வனஓடை தண்ணீர் தவழ்வது தமிழக வனப்பகுதியாக இருந்தாலும் அது கலப்பது கர்நாடகா அணை என்பது வேதனையான விஷயம்.
ஆ சன ூர், தாளவாடி, கேர்மாளம் பகுதியில் வினாடிக்கு சுமார் இரண்டாயிரம் கனஅடி தண்ணீர் பல்வேறு ஓடைகள் மூலம் கர்நாடகா அணையான சிக்கள்ளி மற்றும் சொர்ணவதி ஆகிய அணைகளில் கலக்கிறது. கர்நாடகா அரசு சிக்கள்ளி அணையில் தண்ணீர் நிரம்பியதும் வெளியேறும் தண்ணீரை சொர்ணவதி அணை மூலம் தடுக்கிறது. சொர்ணவதி அணை நிரம்பி வெளியேறும் தண்ணீரை பல தடுப்பு அணைகள் கட்டி தடுத்து நிறுத்தியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் தண்ணீரை தடுப்பு அணை கட்டி அந்த தண்ணீரை தாளவாடி மற்றும் திம்பம் மலைஅடிவாரத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்படி திட்டம் அமைத்து செயல்படுத்தலாம். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மனம் வைக்கவேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.