Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக காவ‌ல்துறை எத‌ற்கு‌ம் லாய‌க்‌கி‌ல்லை: ஜெயல‌லிதா!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (16:35 IST)
எனது ஆட்சிக் காலத்தில் ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராக விளங்கிய தமிழக காவல்துறை, இன்று எதற்குமே லாயக்கில்லாமல் செயலிழந்து இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழ்நாட்டில ் விடுதலைப ் புலிகளின ் ஊடுருவலும ், நக்சலைட்டுகளின ் ஆதிக்கமும ் பெருக ி, கடந் த 2 ஆண்டுகளா க தமிழ்நாட ு ஆயுதக்காடா க காட்ச ி அளித்துக ் கொண்டிருப்பத ை பல்வேற ு சந்தர்ப்பங்களில ் நான ் சுட்டிக்காட்ட ி இருக்கிறேன ்.

அண்மையில ் ஒர ு சம்பவம ் நிகழ்ந்துள்ளத ு. கும்மிடிப்பூண்டியில ் உள் ள இலங்க ை அகதிகள ் முகாமில் பயங்கர சத்தத்துடன் தோட்டாக்கள் வெடித்து இருக்கின்றன. இதில், இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கிணற்றின் அருகே உள்ள புதரிலும், பாழடைந்த மோட்டார் அறையிலும், மூன்று அங்குலம் அளவுடைய, சுமார் 40 கிலோ எடை கொண்ட ஏ.கே. 47 மற்றும் பல்வேறு ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய மூன்று மூட்டை தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி கிணற்றுக்குள் இரு‌ந்த 15 மூட்டை தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேற் படி தோட்டாக்களில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரை உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இது போன்ற தோட்டாக்கள் தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் பதுக்க ி வைக்கப்பட்டிருக்கிறத ோ? எப்பொழுது அவைகள் வெடிக்கும ோ? என்ற அச்ச உணர்வில் தமிழக மக்கள் உறைந்து போயுள்ளனர்.

எனது ஆட்சிக் காலத்தில் ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராக விளங்கிய தமிழக காவல்துறை, இன்று எதற்குமே லாயக்கில்லாமல் செயலிழந்து இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

பாதுகாப்பிற்கா ன உத்தரவாதத்த ை முதலமைச்சர ் தருவார ா என் ற தமிழ க மக்களின ் எதிர்பார்ப்ப ை பூர்த்த ி செய்யும ் விதமா க கருணாநித ி தனத ு குடும்பப ் பிரச்சனைகள ை ஒதுக்கிவிட்ட ு, தமிழ்நாட்டில ் சட்டம ்- ஒழுங்க ை சீர ் செய் ய நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments