Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதாவு‌க்கு பாதுகா‌ப்பு: அ‌திகா‌ரி ஆ‌ய்வு! தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (15:45 IST)
நீதிமன்றத்தின் தீர்ப்பை யேற்று, அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, ஜெயல‌லிதாவை கொண்டு ஆய்வு செய்து, அவரது பரிந்துரை என்னவென்று கேட்டு இந்த அரசு செயல்படும் எ‌ன்று த‌மிழக அரசு ‌கூ‌றியு‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டு‌ள்ள செய்தி குறிப்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து சென்னை உயர்நீதி மன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, "இந்த வழக்கில் தற்போதைய முதலமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதி மன்றம் ஏற்கவில்லை'' என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதாவிற்கு கூடுதல் பாதுகாப்பு தருவது குறித்து, காவ‌‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்திட வேண்டுமென்று உயர்நீதி மன்ற நீதிபதி தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்.

தற்போது நீதிமன்றம் பாதுகாப்பினை அதிகப்படுத்திட வேண்டுமென்று எந்த ஆணையையும் பிறப்பிக்க வில்லை. அதிகாரி ஒருவரை நியமித்து, அவரைக் கொண்டு ஆய்வு செய்திட வேண்டுமென்று சொல்லியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பையேற்று, அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, அவரைக் கொண்டு ஆய்வு செய்து, அவரது பரிந்துரை என்னவென்று கேட்டு இந்த அரசு செயல்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments