Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நூல் விலை உயர்வை‌க் கண்டித்து ஈரோட்டில் வேலைநிறுத்தம், கடையடைப்பு!

- ஈரோடு வேலு‌ச்சா‌மி

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (13:13 IST)
‌ நூல ் விலை உயர்வை‌க் கண்டித்தும், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரியும் ஈரோட்டில் இன்று கைத்தறி துணி வணிகர் சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய தொழிலாக கைத்தறி தொழில் விளங்கி வருகிறது. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இந்த தொழிலுக்கு அடிப்படை தேவையான ‌நூல் விலையில் கடும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. ரூ.25 முதல் ரூ.60 வரை விலை ஏறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பஞ்சு ஏற்றுமதி என கருதப்படுகிறது.

ஆகவே மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்து ‌நூல் விலையை குறைக்க வேண்டும், ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் இன்று ஜவுளி பகுதியில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments