Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: தா.பாண்டியன்!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (10:55 IST)
'' பெட்ரோல ், டீசல ், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு வரும் நாடாள ுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும ்'' என்று இந்திய கம ்ய ூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

கரூர் மாவட்ட இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொதுக்குழு கூட் ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌‌ள்ள வ‌ந்த அ‌க்க‌‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயலாள‌ர் தா.பாண்டியன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தற்போது அய‌ல ்நாட ்டி‌ல ிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண ்ணெ‌‌ய் ஒரு பீப்பாய்க்கு 126 டாலராக உள்ளது. 126 டாலருக்கு ஒரு பீப்பாய் கச்சா எண ்ணெ‌ய் விலை இருக்கும் போது இந்த அளவிற்கு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளார்கள்.

200 டாலர் ஆகும் போது இந்த அரசு என்ன செய்ய முடியும ். இந்த விலை உயர்வை அறிவித்த மறு நாளே பிளாஸ்டிக் பொருட்கள் விலை 30 ‌ விழு‌க்காடு அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து வாகன கட்டணங்கள் உயரும். இதனால் இந்திய வளர்ச்சியின் வேகம் கட்டுப்படுத்தப்படும்.

இந்த மாத இறுதிக்குள் பண வீக்கம் 10 புள்ளியை தாண்டி விடும். இந்த நிலை ஏற்பட்டால் மத்திய அரசின் வரவு-செலவு திட்டம் இன்னும் 2 மாதங்களில் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் பஞ்சப்படியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே ஒன்றை ஒன்று துரத்தும் நிலை ஏற்படும்.

இந்த பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினை வரும் நாட ாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தேர்தலில் மாற்று கொள்கை கொண்ட கட்சிகளோடு கூட்டணி வைப்போம் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments