Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 7‌ம் தே‌தி ஆட்டோக்கள் ஓடாது!

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (16:39 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை‌க் கண்டித்து வரும் ஜூன் 7-ம் தேதி தமிழகம் முழுதும் ஆட்டோக்கள் ஓடாது என்று தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம். மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

சி.ஐ.டி.யு. பொதுச் செயலர் எஸ். சவுந்தரராஜன், மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், மற்றும் பிற தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மு‌ன்னதாக, த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் 7 ஆ‌ம் தே‌தி முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி அ‌றி‌வி‌‌த்து‌ள்ளது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments