Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ட்டார‌ப் போ‌க்குவர‌த்து அலுவலக‌ங்க‌‌ள் க‌ணி‌‌னி மூல‌ம் இணை‌ப்பு!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (16:35 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள வ‌ட்டார‌ப ் போ‌க்குவர‌த்த ு அலுவலக‌ங்க‌ள ் அனை‌த்து‌ம ் க‌ணி‌ன ி மயமா‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதுட‌ன ், இணையத ள அக‌ண் ட அலைவ‌ரிச ை இணை‌ப்பு‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதனா‌‌ல ் எ‌ந் த ஒர ு அலுவலக‌த்‌தி‌ல ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள தகவ‌ல்களையு‌ம ் வேறொர ு அலுவலக‌த்‌தி‌‌ல ் எ‌ளிதா க எடு‌த்து‌ப ் பய‌ன்படு‌த் த முடியு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அரசு வெளியிட்டுள்ள செய்த ி‌ க் குறிப்பில் கூற ி‌ யிருப்பதாவது:

த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள 53 வட்டா ர‌ ப் போக்குவரத்து அலுவலகங்கள், 45 போக்குவரத்து பகுதி அலுவலகங்கள், 7 மண்டல அலுவலகங்கள், போக்குவரத்துத்துறை தலைமை அலுவலகம், மாநில போக்குவரத்து தீர்ப்பாயம் ஆகியவ ை கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான ஓட்டுனர் உரிமம் வழங்கல், அனுமதி வழங்கல், வாகனப்பதிவுச் சான்று வழங்கல், தகுதிச் சான்று வழங்கல், வரி செலுத்துதல் ஆகிய சேவைப் பணிகள் செய்யப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் தேசிய தகவல் மையம் தயாரித்துள்ள மென்பொருள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

அரசு விரைவூக்க அட்டை முறையை அறிமுகப்படுத்திட கொள்கை முடிவெடுத்து, சென்னை (தெற்கு), கடலூர் மற்றும் சிவகங்கை வட்டா ர‌ ப் போக்குவரத்து அலுவலகங்களில் முன்னோடித் திட்டமாக செயல்படுத்துதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கணினி மூலம் பழகுநர் உரிமம் வழங்கிடும் முறை தற்போது 21 வட்டாரப் போக்குவரத்து மற்றும் பகுதி அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 13 அலுவலகங்களில் விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று இப்பணி தொடங்கப்பட உள்ளது.

அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களுக்கும் இணைய தள அகண்ட அலைவரிசை வசதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேசிய தகவல் மையம், மாநில போக்குவரத்து அதிகாரி அலுவலகம், மற்றும் பிற தொடர்புடைய துறைகளான காவல்துறை, மாநில குற்ற ஆவ ண‌ க் கூடம் மற்றும் இதர அலுவலகங்களும் அகண்ட அலைவரிசையுடன் இணைக்கப்படும்.

இதற்கு‌த ் தேவையான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் ஒருங்கிணைந்த தகவல் மேலாண்மை செயல்படுத்திட தேசிய தகவல் மையம் தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 20 சோதனைச் சாவடிகள் இயங்கி வருகின்றன. தற்பொழுது கணினி மயமாக்குதல் திட்டத்தின் கீழ் 8 சோதனைச் சாவடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் நடவடிக்கைகளை கணினி மயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி தாலுக்காவில் உள்ள `பெத்திகுப்பம்' சோதனைச் சாவடியில் கணினிகள் மற்றும் கணினி மென்பொருள்கள் நிறுவப்பட்டு சோதனை அடிப்படையில் இயங்கிக் கொண்டு வருகிறது.

போக்குவரத்து இணைய தளம் மூலம் நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்தல், குறைகளை பதிவு செய்தல், நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுதல் மற்றும் தகவல்கள் அனைத்தையும் மக்கள் இணைய தளம் மூலம் எளிதில் அறிந்து கொள்ள இயலும்.

ஒரு வாகனத்தின் பதிவுகளை பற்றிய விவரம், ஒரு ஓட்டுனர் உரிமம் பற்றிய பதிவுகள், வாகனங்களின் அனுமதிச்சீட்டு பற்றிய விவரம் உள்பட பல்வேறு தகவல்களையும் இந்த இணைய தளத்தில் அறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments