ஈரோட ு : ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்குள் காட்டு யானை கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர். இங்கு அணை நீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் உள்ளது. இதற்கு அரை கி.மீ., தொலைவில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகிறது.
webdunia photo
WD
இந்த நிலையில் தற்போது யானை கூட்டங்கள் தண்ணீர் தேடி பல்வேறு பகுதிகளுக்கு படையெடுத்து வருகிறது. நேற்று தண்ணீர் தேடி வந்த 11 யானைகள் பவானிசாகர் பூங்கா அருகே உள்ள மின்சார உற்பத்தி நிலையத்திற்குள் புகுந்துவிட்டது. இதனால் அங்கிருந்த மக்கள் பீதியடைந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் பட்டாசு வைத்து காட்டுயானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டிவிட்டனர். இந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.