Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொ‌த்து வ‌ரி வழ‌க்கு: ஜெயல‌லிதா மனு ‌விசாரணை‌க்கு ஏ‌ற்பு!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (13:57 IST)
சொ‌த்து வ‌ரி கண‌க்கை கா‌ட்ட‌வி‌ல்லை எ‌ன்று கோ‌ரி வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோர ிய ஜெயல‌லிதா‌வி‌ன் மனுவை சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விசாரணை‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ண்டு‌ள்ளது.

1993-94 ஆம் ஆண்டுக்குரிய சொ‌த்து வரி கணக்கை காட்டவில்லை என்று வருமானவரித்துறை அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் ‌ நீ‌திம‌ன்ற‌ம் 1997 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கிலிருந்து த‌ன்னை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை ‌‌ நீ‌திம‌ன்ற‌ம் 2008 ‌பி‌ப்ரவ‌ரி 25ஆ‌ம் தே‌தி தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஜெயல‌‌லிதா மனு தா‌க்க‌ல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை பொருளாதார குற்றவியல் ‌ நீ‌திம‌ன்ற சாட்சிகளை விசாரிக்கவும், மேற்கொண்டு விசாரணை நடத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது வழ‌க்கை ‌விசாரணை‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ண்ட ‌நீ‌திப‌தி, 2 வார‌‌த்த‌ி‌ல் ப‌தி‌ல் அ‌ளி‌க்குமாறு வருமானவ‌ரி‌த்துறை‌க்கு தா‌க்‌கீது அனு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டதோடு, வழ‌க்கை ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌‌தி‌க்கு த‌ள்‌ளி வை‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments