Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேனக்கல் ‌பிர‌ச்சனை சுமுகமாக ‌தீ‌ர்‌க்க‌ப்படு‌ம்: இல.கணேசன்!

Webdunia
திங்கள், 26 மே 2008 (16:46 IST)
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட் ட பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன ் எ ன த‌‌மிழக பா.ஜ.க. தலைவ‌ர் இல.கணேசன் கூறினார்.

கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெற்றது குறித்து த‌மிழக மாநில தலைவர் இல.கணேசன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், வடநாட்டு கட்சி என்று வர்ணிக்கப்பட்ட பா.ஜ.க.வுக்கு தென்நாட்டிலும் வெற்றி கிடைத்துள்ளது. எட ியூ ரப்பா கர்நாடக முத லமை‌ச்சராக பொறுப்பு ஏற்பார்.

கர்நாடகத்தில் தற்போதைய தேர்தல் முடிவு அடுத்து வரும் நாடாளும‌ன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். பா.ஜ.க.வின் வெற்றி, மத்தியில் ஆட்சி புரிகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 4 ஆண்டுகால செயல்பாடுகளுக்கு எதிராக அமைந்துள்ளது.

கர்நாடக முன்னள் முதல்வர் எடியூரப்பா அப்பழுக்கற்ற தேசியவாதி. இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு என்ற கொள்கை உடையவர். இதனால் ஒகேனக்கல் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தமிழக எல்லைக்குள் நடக்கும் திட்டம். அதை நிறைவேற்ற எட ிய ூரப்பா தடையாக இருக்க மாட்டார்.

முதலமைச்சர் கருணாநிதி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக தேர்தல் முடியும் வரை ஒத்திவைப்பதாக கூறியிருந்தார். இது குறித்து தமிழக அரசுதான் கர்நாடக அரசிடம் பேச வேண்டும் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments