Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வார‌த்‌தி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு வெளியிட ஏற்பாடு!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (09:28 IST)
10 ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட அரசு தே‌‌ர்வு துறை அ‌திகா‌ரிக‌ள் ஏற்பாடுக‌ள் செய்து‌ள்ளன‌ர். வரு‌ம் 29 அ‌ல்லது 30 ஆ‌ம் தேதி தேர்வு முடிவு வெளியிட‌ப்படலா‌ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 10ஆ‌ம் வகு‌ப்பு, ஓ.எஸ்.எல்.சி. ஆங்கிலோ- இந்தியன் தேர்வுகள் தொ‌ட‌ங்‌கியது. இ‌ந்த தே‌ர்வுக‌ள் ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைந்தன. 8.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர். பிளஸ்2 ம‌ற்று‌ம் சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுக‌ள் ஏ‌ற்கனவே வெ‌ளி‌யிட‌‌ப்‌ப‌ட்டு ‌வி‌ட்டது. அடுத்ததாக 10‌ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவை மாணவ-மாண‌விக‌ள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கி‌ன்றன‌ர்.

கடந்த ஆண்டு 10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு மே 31ஆ‌ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு வேலூரில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 13,000 விடைத்தாள்கள் எரிந்து சேதமடைந்தன. அதில் 300 விடைத்தாள்களில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடியாத அளவுக்கு முழுவதுமாக எரிந்துவிட்டன. இந்த ‌நிக‌ழ்வு காரணமாக 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஆ‌‌கிவரு‌கிறது.

விடைத்தாள்கள் எரிந்த மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. எந்த முறையில் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் ரகசியமாக வைத்துள்ளனர். எரிந்துபோன விடைத்தாள்கள் ஆங்கிலம் 2-வது தாள் ஆகும். எனவே, ஆங்கில முதல்தாள் மதிப்பெண் அல்லது மற்ற பாடங்களில் பெற்றிருக்கும் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

தேர்வு முடிவுக்கான அனைத்துப் பணிகளும் முன்கூட்டியே முடிக்கப்பட்டுவிட்டதால் 10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவை ஒரு வாரத்திற்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அனேகமாக மே 29 அல்லது 30ஆ‌‌ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெ‌ரி‌கி‌றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments