Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் ‌பீ‌ர் ‌த‌ட்டு‌ப்பாடு! அய‌ல் மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வா‌ங்க‌ப்படு‌கிறது!

Webdunia
வியாழன், 22 மே 2008 (14:11 IST)
கோடையி‌ல் (தங்களின்) வெ‌ப்ப‌த்தை த‌ணி‌ப்பத‌ற்காக குடிப் ‌பி‌ரிய‌ர்க‌ள் ‌பீ‌ரை போ‌ட்டி போ‌ட்டு வா‌ங்‌கி குடி‌ப்பதா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் ‌பீ‌ர் த‌ட்டு‌ப்பாடு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் அதிகரித்துவரும் தேவையை சமாளிப்பதற்காக அய‌ல் மா‌நில‌ங்க‌ளி‌ல் இருந்து அதிகமாக பீர் வாங்கப்படுகிறது.

கோடை காலத்தில் இளநீர ், குளிர்பானங்கள ், தர்பூசண ி, ஜுஸ் வகைகள் அதிகமாக விற்பனையாகும். இவை எல்லாவற்றையும் விட மதுக்கடைகளில் `பீர ்' களுக்கு கடும் கிராக்கி இருக்கும். பிராந்த ி, விஸ்க ி, ரம் போன்ற மதுபானங்கள் குடிப்பவர்கள் கூட கோடை காலத்தில் பீர் அதிகமாக குடிப்பது வழக்கம். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் பீர் வேகமாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது. பாரில் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை காத்திருந்து பீர் குடிக்கிறார்கள்.

இ‌ப்படி குடி ம‌‌ன்ன‌ர்க‌ள் போ‌ட்டி‌ப்போ‌ட்டு‌க்கு கொ‌ண்டு ‌பீ‌‌ர் வா‌ங்‌கி‌க் குடி‌த்து வருவதா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் ‌பீ‌ர் த‌‌ட்டு‌ப்பாடு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனை சமா‌ளி‌க்க அய‌ல் மா‌நில‌ங்க‌ளான புது‌ச்சே‌ர ி, கேரள ா, ஆ‌ந்‌திரா‌வி‌ல் இரு‌ந்து த‌மிழக அர‌சி‌ன் டா‌ஸ்மா‌க் ‌நிறுவன‌ம் கூடுதலா க ‌ பீ‌ர் தருவிக்கிறது.

கட‌ந்த ஐ‌ந்து ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு த‌‌‌மி‌ழ்நா‌ட்டி‌ல் இ‌ப்போதுதா‌ன் ‌பீ‌ர் த‌ட்டு‌ப்பாடு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. மது ‌வி‌‌ற்பனை‌யி‌ல் ப‌‌ஞ்சா‌ப ், ஆ‌ந்‌திராவை தொட‌ர்‌ந்து த‌மிழக‌ம் 3வது இட‌த்‌தி‌ல் உ‌ள்ளது. ஆனா‌‌ல் வ‌ரி செலு‌த்துவ‌தி‌ல் த‌மிழக‌ம் முத‌‌லிட‌த்தி‌ல் உ‌ள்ளது.

2008-09 ஆ‌ண்டி‌ல் ம‌ட்டு‌ம் 20,31,967 ‌பீ‌ர் பெ‌ட்டிக‌ள் (ஒரு பெ‌ட்டி‌யி‌ல் 12 பா‌ட்டி‌ல்க‌ள ்) ‌ வி‌ற்பனையா‌கியு‌ள்ளது. கட‌ந்த ஆ‌ண்டு 18,00,084 பெட்டிகள் ‌வி‌ற்பனை ஆ‌கியு‌ள்ளது. கட‌ந்த ஆ‌ண்டு ‌வி‌ற்பனை ‌விட இது 13 ‌விழு‌க்காடு அ‌திக‌ம்.

டாஸ்மாக் கடைகளில் கிங் பிஷர ், பிளாக் அண்ட் நைட் சூப்பர் ஸ்ட்ராங்க ், புல்லட் சூப்பர் ஸ்ட்ராங்க ், மார்க்கபோல ோ, கல்யாணி போன்ற பீர் வகைகள் அதிகமாக விற்பனையாகின்றன. மொத்தம் 15 வகையான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இ‌தி‌ல் ராயல் சேலன்ஜ ், கேனன் 10,000 சூப்பர் ஸ்ட்ராங்க ், யு.பி.ஐஸ். பிரிமீயம் அய‌ல் மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ‌பீ‌ர்க‌ள் வா‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

தமிழ்நாட்டின் பீர் தேவை சராசரியாக ஒரு மாதத்திற்கு 20 லட்சம் பெட்டிகள். இ‌ந்த மாத‌த்தில் 26 ல‌ட்ச‌ம் ‌பீ‌ர் பெ‌ட்டிக‌ள் வா‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது டா‌ஸ்மா‌‌க் ‌நிறுவன‌ம ். கோடை‌ மாதமான ஏ‌ப்ர‌‌லி‌ல் இரு‌ந்து தொட‌ங்‌கிய ‌பீ‌ர் ‌வி‌‌ற்பனை த‌ற்போது உ‌ச்ச‌த்தை அடை‌ந்து‌ள்ளது.

கட‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌ல் ரூ.10,000 கோடி‌‌‌க்கு மது ‌வி‌‌ற்பனை ஆ‌கியு‌ள்ளது. ‌வி‌ற்பனை‌யி‌ல் 20 விழு‌க்காடு ‌பீ‌ர் மூல‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது. நட‌ப்பு ‌நி‌தியா‌ண்டி‌ல் அதாவது மே ம‌த்‌‌தி வரை மதுபான‌ம் ரூ.2,800 கோடி‌க்கு ‌வி‌‌ற்பனை ஆ‌கியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments