Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்!

Webdunia
சனி, 17 மே 2008 (10:33 IST)
மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மேற்கொள்ள மே 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

இது தொட‌ர்பாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மே 21ஆம் தேதி அளிக்கப்பட உள்ளதால், மே 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஐந்து வேலை நாட்களில் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) சென்னை திருவல்லிக்கேணி, காமராஜர் சாலையில் உள்ள அரசு முன்மாதிரி மேல் நிலைப்பள்ளியில் வேலை வாய்ப்பு பதிவிற்கான சிறப்பு முகாம் நடை பெறவுள்ளது.

இம்முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இப்பதிவிற்கு வரும் மாணவர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் ஆகியவை கொண்டுவருதல் வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10 ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு மதிப்பெண்கள் சான்றினைக் கொண்டு ஏற்கனவே பதிவு செய்தவர்கள், சென்னை, சாந்தோமிலுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று கூடுதல் கல்வி தகுதியினை பதிவு செய்து கொள்ளலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments