உலக அமைதிக்காக கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்து வரும் க டல ூர் வாலிபர் நேற்று பவானி வந் தடைந்தார ்.
webdunia photo
WD
கடல ூர் மாவட்டம ், நெய்வேலியை சேர்ந்த சி.ஆர்.கா லன ியை சேர்ந்தவர் துரைராம் (48). இவர் கடந்த 1998 வருடத்திற்கு முன் அப்பகுதியில் கொத்தனாராக பணியாற்றி வந்தார். சிவன் மற்றும் காளியின் தீவிர பக ்தராக இருந்த இவருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டதன் விளைவாக இந்து மதத்தில் இருந்து க ிற ிஸ்தவ மதத்திற்கு மாறினாராம்.
பின் க ிற ிஸ ் தவ ஆலயங்களுக்கு சென்றபோது அங்கும் அவர்களின் நடவடிக்கையில் துரைராமிற்கு அத ிர ுப்தி அளித்தது. இதன் காரணமாக க ிற ிஸ ்தவ ஆலயங்களுக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார். இவருக்கு திருமணமாகி சிவபாக்கியம் என்ற மனைவியும் கனிமொழி, மனோன்மணி என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இ வரது நடவடிக்கை இவருடைய மனைவி, குழந்தைகளுக்கு பிடிக்கா தத ால் கடந்த 1998 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே வந்த துரைராம், இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் அமைதியாக வாழ நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.
அதன்படி முதலில் கன்னியாகுமரிக்கு சென்று அந்த மண்ணை முத்தமிட்டு வணங்கி தன்னுடைய நடைபயணத்தை தொடங்கியுள்ளார். சென்னை, ஆந்திரா, மக ார ாஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, பஞ்சாப் என இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை நடந்தே சுற்றிவிட்டு கடந்த ஆண்டு மீண்டும் தமிழகம் வந்துள்ளார்.
கடந்த வாரம் கோயமுத ்த ூர் வந்து அங்கிருந்து நேற்று பவானி வந்தார். இங்கிருந்து மேட்டூர் வழியாக கர்நாடகா மாநிலம் செல்கிறார் துரைராம். இவர் ஒரு வண்டி வைத்து அதை இழுத்துக்கொண்டே செல்கிறார். அந்த வண்டியில் கட்டில், ஆடைகள், மழைவந்தால் டேரா போடும் வசதி என அனைத்தும் வைத்துள்ளார்.
இது குறித்து துரைராம் கூற ுகையில், ந ாள்தோறும் காலை ஐந்து மணிக்கு நடைபயணத்தை துவங்கி பத்து கி.மீ., துரம் பதினொறு மணிக்குள் கடந்துவிடுவதாகவும் பின் மாலை நான்கு மணிவரை ஓய்வெடுத்துக்கொண்டு நான்கு முதல் இரவு எட்டுமணிவரை மீண்டும் பத்து கி.மீ. த ூரம் நடப்பதாகவும் கூறுகிறார்.
நடப்பது தனக்கு ஆனந்தத்தை அளிப்பதாகவும் உலக அமைதி வேண்டி மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தை அடுத்து வரும் 2012 ம் ஆண்டில் முடிக்கபோவதாகவும் அவர் கூறினார்.