Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை‌யி‌ல் யானை கூட்டம் : வாகன ஓ‌ட்டிக‌ள் அச்சம்!

வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 14 மே 2008 (12:34 IST)
பண்ணாரி வனப்பகுதியில் சாதாரணமாக தேசிய நெடுஞ்சால ை‌யி‌ல் சாதாணமாக கடக்கும் யானை கூட்டங்களால் இந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம ், சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானைகள் அதிகமாக வசித்து வருகிறது. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் எதிரொலியாக காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக தண்ணீர் தேடி வனக்குட்டைக்கு வந்துகொண்டுள்ளது.

மாலை நேரங்களில் பண்ணாரி அருகே உள்ள வனக்குட்டையில் தண்ணீர் குடித்துவிட்டு இரவு முழுவதும் இந்த வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 209 ன் ஓரத்தில் வந்து நிற்றுகொள்கிறது.

பின்னர் சாலையின் தென்பகுதியில் வந்து அங்குள்ள விவசாய பயிர்களை பதம்பார்க்க தொடங்கிவிடுகிறது. பின் காலை ஐந்து மணி முதல் எட்டு மணிவரை சத்தியமங்கலம் பண்ணாரி வழியில் புதுகுய் யன ூர் பிரிவில் இருந்து பண்ணாரி கோயிலுக்கு சற்று முன்பு வரை உள்ள வனப்பகுதியில் சாதாரணமாக யானை கூட்டங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை தெற்குபக்கத்தில் இருந்து வடக்கு பக்கத்திற்கு செல்கிறது.

webdunia photoWD
இது தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக காணப்படுகிறது. நாள்தோறும் இந்த வழியாக செல்பவர்கள் கவனமாக எச்சரிக்கையுடன் இருபக்கமும் பார்த்து சென்றுவிடுகின்றனர்.

ஆனால் புதியதாக வருபவர்கள் இந்த யானை கூட்டத்திற்கு அருகில் சிக்கி கொள்கின்றனர். உடனே யானை கூட்டங்கள் அந்த வாகனங்களை விரட்ட தொடங்கிவிடுகிறது. இந்த வழியாக வனவிலங்குகள் சாலையை கடப்பது குறித்து எச்சரிக்கை பலகைகள் வைத்திருந்தாலும் வாகனத்தில் வருபவர்கள் அதை கவனிப்பதில்லை.

இது குறித்து வனத்துறை அதிகாரி இராமசுப்பிரமணியம் கூறுகையில ், '' வனவிலங்ககுள் சாலையை கடக்கும்போது வாகனத்தில் செல்பவர்கள் நின்று கொண்டால் போதும். அது யாருக்கும் சொந்தரவு செய ்யா மல் சாதாரணமாக சாலையை கடந்து சென்றுவிடும். நாம் அதை துன்புறுத்தினால் மட்டுமே நம்மை வனவிலங்குகள் தொந்தரவு செய்யும ்'' என்றார்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments