Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 30‌க்கு ‌பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது: ஆ‌ற்காடு வீராசாமி!

Webdunia
திங்கள், 12 மே 2008 (11:15 IST)
'' காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கி விட்டதால், மே 30 ஆ‌ம் தே‌தி‌ க்குப் பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.

திரு‌ச்‌சி‌யி‌ல் நே‌ற்று ‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் மூலம் 1000 முதல் 1800 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் மே 15ஆம் தேதிக்குப் பிறகுதான் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கும்.

ஆனால், இந்தாண்டு ஏப்ரல் 27ஆம் தேதி முதலே மின் உற்பத்தி தொடங்கி விட்டது. காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கி விட்டதால், இனி வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெற தேவையில்லை.

தமிழகத்தை 6 மண்டலமாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

மின் உற்பத்தியில் தற்போதுள்ள இதே நிலை நீடிக்குமேயானால் தொழிற்சாலைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த சுழற்சி முறையிலான விடுப்பு திட்டம் விரைவில் கை‌விட‌‌ப்படு‌ம்.

காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கி விட்டதால், மே 30 ஆ‌ம் தே‌தி‌ க்குப் பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments