Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈராக்கில் குண்டு வீச்சில் பலியான 2 தமிழர்களின் உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது!

Webdunia
திங்கள், 12 மே 2008 (09:15 IST)
ஈராக்கில் தீவிரவாதிகளின் குண்டுவீச்சுக்கு பலியான 2 தமிழர்களின் உடல் நாள ை (13ஆ‌ம் தே‌தி) சென்னைக்கு கொண்டு வ ர த‌மிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஈராக்கில் கடந்த 8 ஆ‌ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் சென்னை மாம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில், நாகப்பட்டினம் அருகேயுள்ள கீழேசனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆக ியோ‌ர் ப‌லியா‌யின‌ர். இருவரு‌ம் அ‌ங்கு‌ள்ள தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

பலியான ‌ நி‌க‌ழ்வு குறித்து சக ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலில் தகவல் கொடுத்தனர். இறந்துபோன ரமேஷ் குமாரின் தந்தை சாமியப்பன் தனது மகன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் டி.எஸ்.ஜவகரிடம் மனு கொடுத்தார். இதுகுறித்து அவர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டது.

இந்த நிலையில், நேற்று முதலமைச்சர் செயலக அதிகாரிகள் இறந்துபோன இருவரின் வீடுகளுக்கும் சென்றனர். இருவரின் உடல்களும் நாளை (13 ஆ‌ம் தே‌தி) சென்னை கொண்டுவர தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்திருப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments