Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திரதிட்ட சிக்கலுக்கு கருணாநிதியே காரணம்: வைகோ!

Webdunia
ஞாயிறு, 11 மே 2008 (11:16 IST)
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் இன்று ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம் எ‌ன்ற ு வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

தூத்துக்குடியில் ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ செய்தியாளர்களுக ்கு அளித்த பேட்ட ி‌யி‌ல், நாடு முழுவதும் விலைவாசி உயர்வால் நடுத்தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருப்பதால் விலைவாசி உயர்வு பாதிக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். யாருக்கு வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. மணல் கொள்ளையர்களுக்கும், பெரும் பண முதலைகளுக்கும் தான் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. ஆனால், நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி உயரவில்லை.

தமிழகத்தில் காவல் துறையின் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்னை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட பிரச்னைகளில் முதல்வர் கருணாநிதி தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்.

உணவு, மரு‌ந்து பொரு‌ட்களை தடு‌ப்பது யா‌ர்?

இலங்கையில் வாடும் அப்பாவித் தமிழர்களுக்கு மனிதாபிமானத்தோடு உணவு, மருந்துப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்ப கடந்த 14 மாதங்களாக அனுமதி அளிக்காதது ஏன்? இதுகுறித்து பிரதமரிடம் கேட்டால் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதே என்கிறார். இதற்குப் பின்னணியில் இருந்து தடுப்பது யார்?

சேது சமுத்திரத் திட்டம் தேவையான திட்டம். அதை இடியாப்ப சிக்கலுக்குள் மாட்டிவிட்டவர் தமிழக முதல்வர் கருணாநிதிதான். மாற்று வழியில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று ஆராய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்ல போகிறது என்று தெரியவில்லை.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தண்டனை காலம் முடிந்துவிட்டதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருப்பதை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் எ‌ன்று வைகோ கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments