Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ன்லை‌ன் வ‌ர்‌த்தக‌த்து‌க்கு தடை: வ‌‌ணிக‌ர் மாநா‌ட்டி‌ல் ‌தீ‌ர்மான‌ம்!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (10:37 IST)
'' அநியாய விலையேற்றத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வர்த்தக சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும ்'' என்று வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வணிகர்தின வெள்ளிவிழாவையொட்டி விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநாட்டினை சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நடத்தியது. இ‌ந்த மாநா‌ட்டி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌‌ங்க‌ள் வருமாறு :

அநியாய விலையேற்றத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வர்த்தக சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். விலைவாசியை உயர்த்தும் மதிப்புக்கூடுதல் வரியை திரும்பப்பெற வேண்டும். சுயதொழில் புரிவோர் மற்றும் மக்கள் விரோத சேவை வரியைக் கைவிட வேண்டும்.

சில்லரை வணிகத்தில் அன்னிய மற்றும் உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இரவு நேர டீ, டிபன் கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

சிறு டீக்கடைகள், டிபன் கடைகள் போன்ற சிறு தொழில் நடத்துவோர் பயன்படுத்தும் வகையில் கியாஸ் சிலிண்டர் கட் ட ணத்தை குறைக்க வேண்டும். கோயம்பேட்டில் உணவு தானிய வணிக வளாகத்தை உடனடியாக அமைக்க வேண்டும். உலகமயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நெசவுத் தொழிலையும், மீன்பிடித் தொழிலையும் மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ய ூக வணிகம் முழுக்க தடை செய்யப்பட வேண்டும். ய ூக வணிகத்திற்கு இடமளிக்கும் சட்டம் நீக்கப்பட வேண்டும். சர்வதேச அளவில் நமக்கு தேவையான பெட்ரோலியம், உணவு எண்ணெய், பருப்பு வகைகள் போன்றவை பண்ட மாற்று அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

ஓபெக் போல அரிசி உற்பத்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அரங்கம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இந்தியா, சீனாவால் உலக அளவில் விலையேற்றம் நிகழ்கிறது என்று கூறிய அமெரிக்க அதிபர் புஷ், அவரது மந்திரி கண்டலிசா ரைஸை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது எ‌ன்று ‌‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments