Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூல் விலை உயர்வு : கரூரில் வேலை நிறுத்தம்!

Webdunia
திங்கள், 5 மே 2008 (14:05 IST)
நூல் விலை உயர்வை கண்டித்து கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தற ி, விசைத்தற ி, பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

தமிழக்தில் கரூரிலும ், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் படுக்கை விரிப்ப ு, திரைச் சீலைகள ், பெட் ஷீட ், ஜமுக்காளம ், துண்டு ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து உள்நாட்டில் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புவதுடன ், அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு படுக்கை விரிப்ப ு, திரைச் சீல ை, மேஜை விரிப்பு போன்றவைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பருத்தி நூல் விலை உயர்வ ு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்ப ு, தொழிலாளர் பற்றாக்குற ை, விலை வாசி உயர்வு போன்றைகளால் பாதிக்கப்பட்டு தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் இங்கு தொழில் நெருக்கடியை சந்தித்து வருகின்றது.

கரூரில் உள்ள தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மோட்டா ரக நூல்களின் விலை கட்டுப்படியாகத அளவிற்கு உயர்ந்து விட்டத ு, இதை கட்டுப்படுத்த கோரி கரூர் மாவட்ட நெசவு மற்றம் பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம ், கரூர் ஜவுளி ஏறறுமதியாளர்கள் சங்கமும் மூன்று நாள் வேலை நிறுத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதனையடுத்து இன்று கரூரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தற ி, பின்னலைட ை,. சாயப்பட்டறைகள் ஆகியவை வேலை நிறுத்தம் ஈடுபட்டுள்ளன.

இந்த வேலை நிறுத்தம் பற்றி ஏற்றுமதியாளர்கள் கூறுகையில ், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து இருப்பதால் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அந்நிய நாட்டு முகவருக்கு கொடுக்கும் கமிஷன் மீது விதிக்கப்படும் 12.36 விழுக்காடு சேவை வர ி, அத்துடன் ஏற்றுமதி நிறுவனங்கள் பல்வேறு வகையில் 14 விதமான சேவை வரிகளை செலுத்த வேண்டியதுள்ளது. ஏற்றுமதி இறக்குமதி கொள்கை அறிவிப்பில் அந்நிய நாட்டு முகவர்களுக்கு கொடுக்கப்படும் கமிஷன் மீதான சேவை வரி ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது வெறும் வார்த்தை ஜாலத்துடன் நின்றுவிட்டது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் வேலை நிறுத்தம் மட்டுமல்லாத ு, தமிழ்நாடு ஜவுளி சங்கங்களின் அமைப்புகளின் அழைப்பிற்கினங்க மே 16ஆம் தேதி மீண்டும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று சங்கம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments