Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் கருணா குழு‌வின‌ர் ஊடுருவ‌ல்: ‌திருமாவளவ‌ன் ச‌ந்தேக‌ம்!

Webdunia
சனி, 3 மே 2008 (19:00 IST)
‌ சி‌ங்கள‌ப் படையுட‌ன் சே‌ர்‌‌‌ந்‌‌திய‌ங்கு‌ம் கருணா குழு‌வின‌ர் த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் ஊடுரு‌வி ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திராக‌ச் ச‌தி‌த்‌தி‌ட்ட‌ங்களை மே‌ற்கொ‌ள்ள உ‌‌ள்ளதாக இ‌ந்‌திய உளவு‌ப் ‌பி‌ரிவு ‌விடு‌த்து‌ள்ள எ‌ச்ச‌ரி‌க்கை கு‌றி‌த்து தொ‌ல். ‌திருமாவளவ‌ன் ச‌ந்தேக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

ஒவ்வொரு முறையும் சிங்களப் படையினர் விடுதலைப ் புலிகளால் பெரும் பாதிப்பிற்கும், இழப்பிற்கும் ஆளாகும்போதெல்லாம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அரசியல் நகர்வுகள் நிகழ்வதுண்டு. எடுத்துக்காட்டாக, கடந்த வாரம் முகமாலைப் பகுதியில் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான சிங்களப் படையினர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் இந்திய உளவுப ் பிரிவு இவ்வாறான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இத்தனை ஆண்டு காலம் தமிழ்நாட்டில் புலிகள் ஊடுருவல் என்ற செய்தியை பலநூற ு முறை தமிழ்நாட்டின் ஊடகங்களில் உலவவிட்ட இந்திய உளவுப ் பிரிவு முதன்முறையாக கருணா பிரிவு ஊடுருவல்-தலைவர்களைக் கடத்திப் புலிகள் மீது பழிபோட முயற்சி என்று கரிசனம் காட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் என்று ஆட்சியை கவிழ்த்தவர்கள். தமிழ்த ் தேசிய தலைவர்களை தடாவிலும் பொடாவிலும் ஆண்டுக்கணக்கில் சிறையிலடைத்தவர்கள். இப்போது புலிகள் மீது பழி போடப் போகிறார்களே என்று கலங்குகின்றனர்.

அண்மையில் நார்வேயில் ஆன்மீகவாதி ரவிசங்கர் முயற்சியில் நிகழ்ந்த தெற்காசிய அமைதி மாநாட்டில் ஈழச ் சிக்கலில் இந்தியா தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகையச் சூழலில், இன்றைக்கு சிங்களப் படையுடன் இணைந்து இயங்கும் கருணா குழு என்று குறிப்பிட்டுள்ளது இந்திய உளவுப் பிரிவு.

இந்நிலையில் இந்திய அரசு, சிங்கள அரசுக்குக் கொடுத்த ராடார்களையும் ஆயுதங்களையும் கப்பல்களையும் திரும்பப் பெறுமா, தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்லும் சிங்கள ராணுவத்தை கண்டிக்கும ா?

கருணா குழு தமிழ்நாட்டில் ஊடுருவல் என்று கூறியுள்ள இந்திய அரசு, இந்தச் செய்தியை வழக்கம் போல தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் கசிய விட்டிருக்கிறத ா? அல்லது ஒரு உண்மையை உணர்ந்து அதனடிப்படையில் பன்னாட்டு உறவுகள் குறித்தக் கோட்பாடுகளுக்கு இசைவாக, சரியான புரிந்துணர்வுடன் இந்தியத் தலையீடு என்கிற தனது கடமையைச் செய்யப் போகிறத ா? போன்ற பல்வேறு கேள்விகளுடன், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறி வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரிக்கும் சிங்கள அரசின் சதியை முறியடிக்க இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆவன செய்ய வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments