Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த் துறை‌யி‌ல் 1 ல‌ட்ச‌ம் பேரு‌க்கு வேலை: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி!

Webdunia
சனி, 3 மே 2008 (14:50 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் ‌ த ி. ம ு.க. ஆ‌ட்‌சி‌க்க ு வ‌ந்த‌தி‌ல ் இரு‌ந்த ு இதுவர ை தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த ் துறை‌யி‌ல ் 1 ல‌ட்ச‌ம ் பேரு‌க்க ு வேல ை வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தகவ‌ல ் தொ‌‌ழி‌ல்நு‌ட் ப ‌ நிறுவன‌ங்களு‌க்க ு அரச ு ‌ நில‌ங்கள ை ஒது‌க்குவத ு, அ‌ந்‌நிறுவன‌ங்க‌‌ள ் மூல‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள வேலைவா‌ய்‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட ‌ விவர‌ங்க‌ள ் ப‌‌ற்‌ற ி ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌‌ல ் வெ‌ள்ள ை அ‌றி‌க்க ை வெ‌ளி‌யி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ம.க. ‌ நிறுவன‌‌ ர் டா‌க்ட‌‌ர ் ராமதா‌ஸ ் வ‌லியுறு‌த்‌தி‌யிரு‌ந்தா‌ர ்.

இத‌ற்க ு ப‌தில‌ளி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ‌ த ி. ம ு.க. தலைவரு‌ம ் த‌மிழ க முத‌‌ல்வருமா ன கருணா‌நி‌த ி இ‌ன்ற ு ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

இதுவரை 13 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அவற்றில் ஆறு நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டன. ஆறு நிறுவனங்களுக்கான கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மோட்டரோலோ நிறுவனத்தில் நேரடியாக 600 பேருக்கும் மறைமுகமாக 1000 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமென்று ஒப்பந்த நேரத்தில் தெரிவித்தார்கள். இதன்படி தற்போது நேரடியாக 600 பேரும், மறைமுகமாக 1000 பேரும் பணி வாய்ப்பு பெற்று பணியாற்றுகிறார்கள்.

டெல் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நேரடியாக 200 பேருக்கும், மறைமுகமாக 600 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமென்று கூறப்பட்டது. தற்போது நேரடியாக 200 பேரும் மறைமுகமாக 600 பேரும் பணி வாய்ப்பு பெற்று விட்டார்கள்.

சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தத்தின் போது தெரிவித்தவாறு நேரடியாக 300 பேரும், மறைமுகமாக 150 பேரும் பணி வாய்ப்பு பெற்றுவிட்டனர்.

கேபாரோ வாகன உற்பத்தி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நேரடியாக 350 பேரும், மறைமுகமாக 350 பேரும் ஒப்பந்ததில் தெரிவித்தவாறு வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

சான்மினா - எஸ்.சி.ஐ. கார்பரேஷன் ஆப் யு.எஸ்.ஏ. நிறுவனத்தில் நேரடியாக 475 பேரும், மறைமுகமாக 150 பேரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தில் இரண்டு கட்டங்களிலும் சேர்த்து நேரடியாக 11,324 பேரும், மறைமுகமாக 22,000 பேரும் ஒப்பந்தத்தில் தெரிவித்தவாறே வேலை வாய்ப்பு பெற்று பணியாற்றி வருகிறார்கள்.

தொழில் துறையைப் பொறுத்து மாத்திரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 37,499 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்பத ் துறையைப் பொறுத்தவரை தி.மு.கழக ஆட்சி மலர்ந்த பிறகு மாத்திரம் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 610 பேர். ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன். நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தனது பணியாளர்களை அழைத்து வர மட்டும் 80 பேருந்துகள் இயங்குகின்றன என்பதிலிருந்தே வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ந‌ம்‌பி‌க்கைதா‌ன ் வா‌‌ழ்‌க்க ை!

ஒவ்வொரு தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதும், அவர்கள் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பார்கள், அப்படி பணிக்கு எடுக்கப்படுகிறவர்கள் தொழிற்சாலைக்கு அருகிலே வாழுகின்ற தமிழர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதித்துதான் அளிக்கப்படுகின்றன.

அந்தத் தொழிற்சாலைகள் கூறுகின்ற எண்ணிக்கையில் 100 பேர் குறைவாக இருக்கலாம், அல்லது 100 பேர் அதிகமாக இருக்கலாம். தொழிற்சாலை வளர வளர அந்த எண்ணிக்கை கூடலாம். அதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்றால் என்ன செய்வத ு? நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்த வேண்டுமே தவிர, எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எதுவும் நடக்காமல் போய் விடும்.

இது மாத்திரமல்ல, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் எல்லாம் இந்த இரண்டாண்டு காலத்தில்தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு, கட்டிடங்கள் கட்டும் பணியிலும், இயந்திரங்களை நிறுவும் பணியிலும் ஈடுபட்டு தொழில் நிறுவனங்களைத் தொடங்கும் நிலையிலே உள்ளார்கள். முழு அளவில் நிறுவனங்களைத் தொடங்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்.

இவ்வாறு முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments