Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரு‌க்கலை‌ப்‌பி‌ல் பெ‌ண் சாவு: செ‌வி‌லிய‌‌ர் கைது!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (11:59 IST)
ஆலங்குடி அருகே கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந ்தா‌ர். அவருக்குக் கருக்கலைப்பு செய்த செவிலி யரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய ்தன‌ர்.

கறம்பக்குடி அருகேயுள்ள கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவருடைய மனைவி மகமாயி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், மகமாயி மீண்டும் கருவுற்றார். கருக்கலைப்புசெய்துகொள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனை செவிலியர் செந்தாமரையை அவர் அணுகியுள்ளார். மகமாயிக்கு 15 நாளுக்கு முன்பு தனது வீட்டில்வைத்து செந்தாமரை கருக்கலைப்பு செய்தாராம்.

இதன் காரணமாக மகமாயிக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கட‌ந்த 30ஆ‌ம் தே‌தி இறந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கறம்பக்குடி காவல ்துறை‌யின‌ர் செவிலியர் செந்தாமரையைக் கைது செய ்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments