Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை‌வா‌சி உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: பா.ஜ.க!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (10:35 IST)
வில ைவா‌சி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் பா.ஜ.க. துணைத் தலைவர் எச்.ராஜா நே‌ற்று செ‌ய்‌தியாள‌‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், சமீபகாலமாக தமிழக க ோ‌ய ில்களில் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்து க ோ‌ய ில்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இ‌ந்த பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது பற்றி கட்சியின் மையக்குழு கூடி விவாதித்து முடிவு எடுக்கும்.

வில ைவா‌சி உயர்வுக்கு மத்திய அரசே காரணம். அமெரிக்க, ஆஸ ்‌ட ்ரேலிய நாடுகளில் ஒ‌ன்றரை மாதங்களுக்கு முன்பு கோதுமை விலை குறைவாக இருந்தது. அப்போதே மத்திய அரசு தேவையான கோதுமையை வாங்கி இருப்பு வைத்திருக்க வேண்டும்.

வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ள போதிலும் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை. வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் வங்கிகள் ரூ.27 ஆயிரம் கோடி கடன் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தித் துறையில் தேக்க நிலை ஏற்பட்டு, மேலும் விலை உயரும்.

மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு விவகாரத்தில் பிரதமர் அளித்த விளக்கம் திருப்தி இல்லை. இந்த பிரச்சினை காரணமாக டி.ஆர்.பாலு, அம‌ை‌ச்ச‌ர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவரை பிரதமர் பத‌வி ‌நீ‌க்க‌ம் செய்ய வேண்டும் எ‌ன்று எ‌ச்.ராஜா வ‌லியு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments