Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம வா‌ய்‌ப்பு சமுதாய‌ம் அமைய‌ட்டு‌ம்: தலைவ‌ர்க‌ள் மே தின வாழ்த்து!

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (16:57 IST)
தொழிலாளர்கள் என்றும் தொழிலாளர்களாகவே இருந்து விடக்கூடாது. அவர்களும் வசதி படைத்தோராக வளர, சம வாய்ப்புச் சமுதாயம் அமையட்டும ் அ‌ன்று அர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் மே ‌தின வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி: 1886 ஆம் ஆண்டு இதே நாளன்று சிகாகோ நகரில் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கம் பூமியெங்கும் எதிரொலித்ததன் விளைவாக இன்று பாட்டாளி மக்களின் வேலை நேரம் நாளொன்றுக்கு 8 மணி என்பது உட்பட உலகத் தொழிலாளர்களின் பல் வேறு நலன்கள் உறுதி செய்யப்பட்டன.

இ‌ந்‌திய ‌திருநா‌ட்டை பொறு‌த்தவரை தொ‌‌ழிலாள‌ர் வ‌ர்‌க்க‌த்‌தி‌ன் தோளோடு தோ‌ள் ‌நி‌ன்று அவ‌ர்களது வா‌ழ்‌வு‌ரிமை‌க்கு தொட‌க்க கால‌ம் தொ‌‌ட்டு பாதுகா‌ப்பு அரணாக இரு‌ந்து ப‌ணியா‌ற்‌றி வருவது இ‌ந்‌திய தே‌சிய கா‌ங்‌கி‌ர‌ஸ் பே‌ரிய‌க்க‌ம்.

சோனியாகாந்தியின் உள்ளத்தில் உருவான உன்னதமாக கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை இன்றைக்கு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் விரி வாக்கம் செய்து செயல் படுத்தி வருவதை உலகே பாராட்டுகிறது. இந்த நல்ல நேரத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது மே தின நல்வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்தி ய அம‌ை‌ச்ச‌ர் ஜி.கே.வாசன ்: தேசத்தின் முது கெலும்பும், மூச்சும் தொழிலாளர்கள்தான் அவர்களது உழைப்பில்தான் தேசத்தின் உயர்வு இருக்கிறது. அவர்களது வியர்வையில்தான் தேசத்தின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது. அவர்கள் இயங்கினால்தான் தேசம் இயங்கும், அவர்கள் வியர்வை சிந்தலாம் ஆனால் கண்ணீர் சிந்தக்கூடாது. இதனை நன்கு உணர்ந்த மத்திய அரசு தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்துகிறது.

ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ: இன்று தொழிலாளர்கள் அகிலம் எங்கும் பெற்று உள்ள உரிமைகளுக்காக அடித்தளம் அமைத்தவர்களை அடக்குமுறைகளைச் சந்தித்தவர்களை, அளப்பரிய தியாகம் செய்தவர்களை உச்சிமேல் வைத்து மெச்சுகின்ற நிகழ்ச்சியாகவும் இனி வருங்காலத்திலும் தொழிலாளர் உரிமைகளுக்கு முதலாளி வர்க்கம் தீங்கு விளைவிக்க நினைப்பதற்கும் இடம் இல்லை என எச்சரிக்கை செய்வதற்கும் நடத்தப்படும் நிகழ்வுதான் நானிலமெங்கும் மே தினக் கொண்டாட்டம்.

ஆலைத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என எவ்வகை யினராயினும் தொழிலாளர்களின் உரிமைக் குரலுக்கு எந்நாளும் தோள் கொடுப் போம் என இத்திருநாளில் அனைவரும் உறுதி பூணு வோம்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்‌த்: தொழிலாளர்கள் என்றும் தொழிலாளர்களாகவே இருந்து விடக்கூடாது. அவர்களும் வசதி படைத்தோராக வளர, சம வாய்ப்புச் சமுதாயம் அமையட்டும்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம ்: முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உறவுப் பாலமாய் இந்நாள் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகின்றது.

ஜனநாயக முன்னேற்ற கழக தலைவர் ஜெகத்ரட்சகன்: உழைப்போருக்கு கடமையும் உண்டு, அதனுடன் கூடிய உரிமைகளும் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய திருநாள். ஒடுக்கப்பட்டு, சுரண்டப் பட்ட உழைப்பாளர்களுக்கு அவர்களின் உரிமையை பெற்றுத்தந்த திருநாள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments