Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 குழந்தைகள் சாவு: எதிர் காலத்தில் இழப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை! வரதராஜ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (17:28 IST)
தடுப்பூசி ப ோட‌ப்ப‌ட்ட 6 குழந்தைகள் இறந் தத‌ற்கான கார‌ணத்தை ஆ‌ய்வு செ‌ய்து, எதிர் காலத்தில் இத்தகைய இழப்பு ஏற்படாமல் இருக்க உத்திரவாதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எ‌ன்.வரதரா‌ஜ‌ன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில ், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டபோது திருவள்ளூரில் 4 குழந்தைகளும், திண்டுக்கல்லில் ஒரு குழந்தையும், தர்மபுரியில் ஒரு குழந்தையும் இறந்துவிட்டன. மேலும், சில குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிர்காக்கும் நோய் தடுப்பு மருந்தே உயிரைப்பறிக்கும் கொடூரம் அனைவரையும் உலுக்கியது. குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.

தடுப்பூசி போடப்பட்ட 6 குழந்தைகள் இறந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்து, எதிர் காலத்தில் இத்தகைய இழப்பு ஏற்படாமல் இருக்க உத்திரவாதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments