Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலைவாசி குறையும் வரை போராட்டம் தொடரும்: கம்யூனிஸ்டுக‌ள் அறிவிப்பு!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (09:52 IST)
'' விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதவரை கம ்ய ூனிஸ்டு கட்சிகளின் போராட்டம் தொடரும ்'' என்று அந்த கட்சிகளின் மாநில செயலாளர்கள் தா.பாண்டியன், என்.வரதராஜன் கூ‌ட்டாக அ‌றி‌‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இந்திய கம ்ய ூனிஸ்ட ு, மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இ‌ந்த கூட்டத்தில் இந்திய கம ்ய ூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் ப ேசுகை‌யி‌ல், கட‌ந்த நா‌ன்கு ஆ‌‌ண்டுகளாக விலைவாசி உயர்வு பற்றி எச்சரித்து வருகிறோம். சில மாதங்களாக தாங்க முடியாமல் அளவு‌க்கு ‌விலைவா‌சி உச்சநிலைக்கு வந்துவிட்டது.

இந்தியாவில் எந்த பொருளும் விளையவில்லை. இதனால் பற்றாக்குறையால் விலைவாசி உயர்ந்துள்ளது என்று சொல்வதை ஏற்க முடியாது. எந்த பொருளும் இந்தியாவில் இல்லை என்ற நிலைமை இல்லை. வாங்கும் சக்தி அதிகரித்ததால் விலை உயர்ந்ததாக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஆறரை கோடி தமிழர்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்திருந்தால், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏன் கடவு‌சீ‌ட்டு இல்லாமல் ஓடவேண்டும். ‌விலைவா‌சி குறையு‌ம் வரை எ‌ங்களது போரா‌ட்ட‌ம் தொட‌ர்‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்கு‌ம் எ‌ன்று தா.பாண்டியன் கூ‌றினா‌ர்.

மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு மாநில செயலாளர் என்.வரதராஜன் ப ேசுகை‌யி‌ல், மாநில அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் தத்தளிக்கிறது. விலைவாசி உயர்வுக்கு எதிரான இந்த போராட்டம் இத்துடன் நிற்காது. தெருத்தெருவாக, வீதி வீதியாக, மண்டலம் மண்டலாக போராடுவோம்.

தேவைப்பட்டால் ரெயில் போக்குவரத்தை கூட நிறுத்தும் போராட்டம் நடத்துவோம ். விலைவாசி குறையும் வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும் எ‌ன்று என்.வரதராஜன் எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments