Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ன்மான‌த்தை கா‌க்க எழு‌த்த‌றிவு பெருக வே‌ண்டு‌ம்: முத‌‌ல்வ‌ர் உலகப் புத்தகத் ‌தின வா‌ழ்‌த்து!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (13:56 IST)
'' நம் தன்மானத்தை நாமே உணரவும், காக்கவும் எழுத்தறிவு பெருக வேண்டும்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உலக‌ பு‌த்தக‌த் ‌‌தின‌த்து‌க்கு வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து செ‌ய்‌தி‌யில், இன்று (23.4.2008) உலகப் புத்தகத் திருநாள். “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று சின்னஞ் சிறுவர்களும் உணரும் வண்ணம் கல்வி நெறியைக் கைக்கொண்டவர்கள் தமிழர்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே ஏன் கற்க வேண்டும்? எப்படிக் கற்க வேண்டும்? என்றெல்லாம் வினாத் தொடுப்பதோடு நின்று விடாமல் விடையையும் கூறிச் சென்றுள்ளனர்.

“கற்க கசடற” என்றார் அ‌ய ்யன் வள்ளுவர். தன்னிடமுள்ள கசடு போகவும், சமுதாயத்தில் நிலவும் கசடு போக்கவும் கற்க கசடற என்றார். மக்களிடம் படிக்கும் பழக்கம் அதிகமாக வேண்டும். படிப்பது அறிவுக்காக மட்டுமன்று. “எழுத்தறியத் தீரும் இழிதகைமை” என்றார்கள். நம் தன்மானத்தை நாமே உணரவும், காக்கவும் எழுத்தறிவு பெருக வேண்டும்.

எனவே, பொது நூலகங்களுக்கு ஒவ்வொரு நூலிலும் 1000 படிகளை வாங்கவும், அரசு நி க‌ழ ்ச்சிகளில் நூல்களைப் பரிசாக வழங்கவும், தம ி‌ழ் வளர்ச்சித் துறை வழியாக ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஆண்டுதோறும் வெளிவரும் சிறந்த நூலுக்கு இருபதாயிரம் ரூப ா‌ய் என்றும், வெளியிட்ட பதிப்பகத்தார்க்கு 5000 ரூப ா‌ய் என்றும், 31 வகைப்பாடுகளுக்கும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கவும், ஊராட்சிகளில்
நூலகங்கள் அமைக்கவும் அரசு ஆணையிட்டுள்ளது.

உலகப் புத்தகத் திருநாள் விழாவைத் தம ி‌ழ் வளர்ச்சித் துறையும், பொது நூலகத் துறையும், தென்னிந்தியப் பதிப்பாளர் சங்கமும் இணைந்து வாசகர்களோடும், எழுத்தாளர்களோடும் கொண்டாடுவதற்குப் பாராட்டுகள். எழுத்தாளர்களுக்கும், பதிப்பகத்தார்க்கும், வாசகர்களுக்கும் இந்த நாளில் என் இனிய வ ா‌ழ ்த்துகள். “கற்க கசடற” எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments