Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் கழிவு அடைப்புகளை சரி செய்ய இயந்திரம் அ‌றிமுக‌ம்!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (10:15 IST)
செ‌ன்னை‌யி‌ல் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு எடுப்பதற்காக தானியங்கி தூர்வாரும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் 2671 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் ம ற்றும் 77,081 நுழைவாயில்கள், 185 கழிவுநீரேற்று நிலையங்கள் உள்ளன. இவற்றில் சேரும் கழிவுநீர் கழிவுகளை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், கழிவுநீர் நுழைவாயில்கள் மற்றும் தொட்டிகள் ஆகியவற்றில் இறங்கி கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, த ூர்வாரும் இயந்திரங்களை முதன்முறையாக அறிமுகப்படுத்தவுள்ளது.

குடிநீர் வாரியத்தின் மூலம் புதியதாக வாங்கப்பட்டுள்ள 3 தூர்வாரும் கழிவுநீர் அகற்றும் இயந்திரத்தின் பணிகளை சேப்பாக்கத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அ‌ப்போது அவ‌ர் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், இந்த இயந்திரத்தின் மூலம், 32 அடி வரை ஆழமுள்ள கழிவுநீர் நுழைவாயிலில் படிந்துள்ள தூர் மற்றும் கழிவுகளைக்கூட அகற்ற முடியும். எடுக்கப்படும் இக்கழிவுகள் உடனடியாக அதே வாகனத்தில் அதற்கென்று பொருத்தப்பட்டுள்ள சேகரிப்பு அமைப்பில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படும். இதனால், கழிவுநீர் நுழைவாயில், கிணறுகளில் பணியாளர்கள் இறங்கி பணிபுரியும் நிலை தவிர்க்கப்படும்.

இந்த இயந்திரங்களின் செயல்பாட்டினை மூன்று மாதங்கள் ஆய்வு செய்தபின், இதுபோன்ற இயந்திரங்கள் அதிக அளவில் வாங்கப்படும். இதன் மூலம் பணியாளர்கள் கழிவுநீர் நுழைவாயில்களில் இறங்கும் நிலை சென்னை மாநகரில் முற்றிலும் தவிர்க்கப்படும ்.

கழிவுகளை அகற்றும் பணியில் இயந்திரங்களை பயன்படுத்துவதால் தொழிலாளர்கள் சாக்கடை கீழ் பகுதியில் இறங்கி வேலை பார்க்கும் நிலை தவிர்க்கப்படும். இந்த திட்டம் வெற்றி பெற்றால் படிப்படியாக, மற்ற மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் எ‌ன்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments