Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா-நளினி சந்திப்பு சட்டப்பூர்வமாக நடந்தது: அ‌திகா‌ரிக‌ள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (10:06 IST)
வேலூர் ‌ சிறை‌யி‌ல் பிரியங்கா - நளினி சந்திப ்பு ‌சிறை சட்ட விதிமுறைப்படிதான் நடந்தது என்று அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வேலூர் பெண்கள் ‌ சிறை‌யி‌ல் பிரியங்கா, நளினியை சந்தித்து பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரியங்கா- நளினி சந்திப்பு சட்டவிதிப்படி தான் நடந்தது என்று ‌ சிறை உயர் அதிகாரிகள் ‌ சிறை சட்ட விதிமுறை புத்தகத்தை காட்டி விளக்கம் அளித்தனர்.

1894 ஆம் ஆண்டு ‌ சிறை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 1983-ம் ஆண்டு தமிழக அரசு ‌ சிறை நடைமுறை சட்டவிதிகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறையில் 520-லிருந்து 542 வரை ஜெயில் கைதிகளை, பார்வையாளர் சந்திப்பது பற்றி எடுத்து சொல்லப்பட்டுள்ளது.

‌ சிறை கைதியையும், பார்வையாளரையும் சந்திக்க வைக்கும் ‌ வி டயத்தில் குறிப்பிட்ட ‌‌ சிறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் முழு அதிகாரம் படைத்தவர் ஆகிறார். அவருடைய இந்த அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. தூக்குத்தண்டனை கைதியாக இருந்தால் மட்டுமே, அவரை பார்வையாளரை சந்திக்க வைக்கும் விஷயத்தில் அரசின் ஒப்புதலை பெறவேண்டும்.

மற்ற கைதிகளை, பார்வையாளர்கள் சந்திப்பதற்கு சம்பந்தப்பட்ட கைதிகளின் விருப்பம் இருந்தால் மட்டும் போதும். ‌ சிறை க‌ண்கா‌ணி‌ப்பாளரே இந்த ‌ வி டயத்தில் முடிவு எடுக்கலாம். ‌ சிறை சட்ட விதி 526(2)ன்படி தண்டனை கைதி ஒருவரை, பார்வையாளர் சந்திப்பதை ‌ சிறை பார்வையாளர் குறிப்பேட்டில் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

‌ சிறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ், அவருடைய ரகசிய குறிப்பேட்டில் மட்டும் பதிவு செய்து கொள்ளலாம். அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், பார்வையாளர், குறிப்பிட்ட கைதியை சந்திப்பதற்கு எழுத்து பூர்வமாக அனுமதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. வாய்மொழியாகவே அனுமதி கேட்டு ‌ சிறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் அதை அனுமதிக்கலாம்.

இதேபோல, ‌ சிறை‌யி‌ல் இருக்கும் கைதி நோய்வாய்பட்டு ‌ சிறை‌யி‌ல் உ‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சை பெற்றால் அந்த கைதியின் விருப்பத்தின்பேரில் பார்வையாளர்களை ‌ சிறை மரு‌த்துவமனை‌யிலேயே சென்று பார்ப்பதற்கும் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் அனுமதி வழங்கலாம். ‌ சிறை விதி 529 இதற்கான அதிகாரத்தை கொடுத்துள்ளது.

‌ சிறை விதி 529(4) தான் முக்கிய விதியாகும். இந்த விதிப்படி மிக மிக முக்கிய பிரமுகர்கள் ‌ சிறை‌யி‌ல் உள்ள தண்டனை கைதியை, ‌ சிறை‌யி‌ல் எந்த பகுதியிலும் விருப்பப்பட்ட இடத்தில் சந்தித்து பேச அனுமதிக்கலாம். பார்வையாளர் கூடத்தில்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை.

இந்த விதிகளின்படி தான், பிரியங்கா `இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்புக்குரிய மிகப்பெரிய முக்கிய பிரமுகர் என்பதால், நளினியை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டது. இதில் நளினியின் விருப்பம் மட்டுமே அவசியம். அவர் விருப்பம் தெரிவித்ததால், பிரியங்கா வாய்மொழியாக கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‌ சிறை க‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ர் அவருடைய விசேஷ அதிகாரத்தின் கீழ் அனுமதி வழங்கியுள்ளார்.

முறையான ஜெயில் சட்ட விதிப்படி தான் பிரியங்கா-நளினி சந்திப்பு நடந்துள்ளது என்பது ‌ சிறை அதிகாரிகள் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments