Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய ஊரக வேலைவாய்ப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரூ.190 கோடி ஒதுக்கீடு!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (09:34 IST)
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் த‌மிழக‌த்த‌ி‌ல் 10 மாவட்டங்களுக்கு மத்திய அரசால் ரூ.190 கோடி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 2008-09ஆம் ஆண்டுக்கான தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களுக்கு அதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக முதல் கட்ட தவணையாக ரூ.190 கோடியே 20 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது முதல்கட்ட தவணையாக நிதியுதவி அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.20 கோடி, நாகப்பட்டினம் ரூ.22 கோடி, சிவகங்கை ரூ.25 கோடி, கடலூர் ரூ.30 கோடி, திருவண்ணாமலை ரூ.19 கோடி, விழுப்புரம் ரூ.53 கோடி, கரூர் ரூ.1.61 கோடி, தஞ்சாவூர் ரூ.9.28 கோடி, திருவாரூர் ரூ.2.61 கோடி, திருநெல்வேலி ரூ.6.14 கோடி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர இத்திட்டத்தின் பகுதி 3-ன் கீழ் 20 மாவட்டங்களுக்கு ரூ.56 கோடியே 27 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

காஞ ்‌ச ிபுரம் ரூ.3.79 கோடி, திருவள்ளூர் ரூ.3.30 கோடி, வேலூர் ரூ.4.91 கோடி, சேலம் ரூ.2.44 கோடி, நாமக்கல் ரூ.2 கோடி, தர்மபுரி ரூ.1.87 கோடி, கிருஷ்ணகிரி ரூ.2.17 கோடி, ஈரோடு ரூ.3.31 கோடி, கோயம்புத்தூர் ரூ.3.60 கோடி, நீலகிரி ரூ.5 கோடி, திருச்சி ரூ.2.23 கோடி, பெரம்பலூர் ரூ.2.17 கோடி, புதுக்கோட்டை ரூ.2.92 கோடி, மதுரை ரூ.2 கோடி, தேனி ரூ.1.38 கோடி, ராமநாதபுரம் ரூ.1.80 கோடி, விருதுநகர் ரூ.2.82 கோடி, தூத்துக்குடி ரூ.2.70 கோடி, கன்னியாகுமரி ரூ.2.64 கோடி, அரியலூர் ரூ.2.80கோடி அளிக்கப்பட்டு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments