Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி மாநகராட்சியாக தர‌ம் உய‌ர்‌த்த‌ப்படு‌ம் : மு.க.ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (09:46 IST)
'' தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும ்'' என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித ்து‌ள்ளா‌ர ்.

தமிழக சட் ட‌ப் பேரவை‌யி‌ல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகை‌யி‌ல், இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக தூத்துக்குடி நகரம் விளங்குகிறது.

பெருகிவரும் தொழிற்சாலைகளாலும், வளர்ந்து வரும் துறைமுகத்தாலும், அமையவுள்ள சேது சமுத்திர கால்வாய் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளாலும், இந்நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள கட்டமைப்பு வசதிகளை வெகுவாக மேம்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே, தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் எ‌ன்று அ‌றி‌வி‌த்தா‌ர்.

தம ிக‌த்த‌ி‌ல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றுடன் வேலூரும் மாநகராட்சியாக மாறும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது தூத்துக்குடி நகராட்சியும் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக ஆகிறது. இதன் மூலம் மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 10 ஆக உயருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments