Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுருட்டு சாமியார் 3வது மனைவியுடன் தற்கொலை!

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2008 (18:43 IST)
முதல் மனைவி கொடுத்த புகாரையடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்த சுருட்டு சாமியார், தனது 3வது மனைவி டாக்டர் திவ்யாவுடன் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மடிப்பாக்கத்தில ் ஆசிரமம் நடத்தி வந்தவர் பழனிச்சாமி (சுருட்டு சாமியார்). இவருக்கு இரண்டு மனைவிகள். ஆசிரமத்திற்கு வந்த டாக்டர் திவ்யாவை சுருட்டு சாமியார் காதலித்து 3வது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், சுருட்டு சாமியாரின் முதல் மனைவி கொடுத்த புகாரையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு நிபந்தனை பிணையில் வெளிவந்த சுருட்டு சாமியார், தனது 3வது மனைவி திவ்யாவுடன், சிட்லபாக்கத்தில் உள்ள 2வது மனைவி மணிமேகலை வீட்டில் தங்கியிருந்தார்.

கடந்த சில நாட்களாக மன நிம்மதியின்றி இவர்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை சுருட்டு சாமியாரும், திவ்யாவும் பிணமாகக் கிடந்தனர்.

பள்ளிக்கரணை காவல் துறையினர் பிணங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகு‌றி‌த்து சுருட்டு சாமியாரின் 2வது மனைவி மணிமேகலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments