Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் எண்ணெய் விலை குறைக்க வேண்டும் : தமிழக அரசு!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (19:09 IST)
சமையல் எண்ணெய்களின் விலைகளை குறைக்குமாறு உற்பத்தியாளர்களை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது!

விலைகள் குறைக்கப்படாவிட்டால் அரசு சந்தைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு எச்சரித்துள்ளார்!

சமையல் எண்ணெய் விலைகளை கட்டுப்படுத்துவது குறித்து உற்பத்தியாளர்களுடனும், வியாபாரிகளுடனும் தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு, மொத்த விலைக்கும், மக்களுக்கு விற்கப்படும் சில்லரை விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்றும், எனவே விலையைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த எண்ணெய்களின் மீதான இறக்குமதி தீர்வையை நீக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குறிப்பிட்ட அமைச்சர் வேலு, இறக்குமதி தீர்வை 7.50 விழுக்காடாக குறைக்கப்பட்ட பிறகும், சந்தையில் விலை குறையவில்லை என்றும், எனவே சமையல் எண்ணெய் விலைகளை உற்பத்தியாளர்கள் குறைக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்பொழுது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அட்டைதாரர்களுக்கு விற்கப்படும் பாமாயில் எவ்வித விலையேற்றமும் இன்றி ரூபாய் நாற்பதுக்கே தொடர்ந்து விற்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுக்க உற்பத்தியாளர்களும், வியாரிகளும் ஒப்புக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments