Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்லிகை பூ விலை வரலாறு காணாத வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

வேலு‌ச்சா‌மி

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (13:27 IST)
webdunia photoWD
ஈரோடு மாவட்டத்தில் மல்லிகை பூ விலையில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடை‌ந்து‌ள்ளன‌ர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ந ூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு பத்துடன் மல்லிகை பூ விற்கு மேல் இப்பகுதியில் உற்பத்தியாகிறது.

இங்கு விளையும் மல்லிகை பூ சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட இடத்தில் இயங்கும் தமிழ்நாடு விவசாயிகள் மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமை சங்கத்தில் ஏலம் மூலம் விற்கப்படுகிறது. இங்கிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

இதுதவிர கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் சார்ஜா வரை இந்த மல்லிகை பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முகூர்த்த காலங்களில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3,000 வரை விற்பனையாகும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.24 க்கு மட்டுமே விற்பனையாகிறது. ஒரு கிலோ மல்லிகை பூ பறிக்க ரூ.30 செலவாகிறது. ஆனால் விலை ரூ. 24 க்கு விற்பனையாவதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

தற்சமயம் முகூர்த்தங்கள் இல்லாத காரணத்தாலும் மல்லிகை பூ உற்பத்தி அதிகமாக உள்ள காரணத்தாலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசு விலை நிர்ணயம் செய்து இப்பகுதியில் ஒரு மல்லிகை பூ தொழில்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சங்கத்தின் தலைவர் முருகேஷ் மற்றும் செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கூறினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments