Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரீமி லேயர் அளவு கோலை அடியோடு நீக்க சட்டம்: ‌திருமாவளவ‌ன்!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (11:37 IST)
பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோரு‌க்கு உய‌ர் க‌ல்வ‌ி ‌நிறுவன‌ங்க‌ளி‌‌ல் 27 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தில் `கிரீமி லேயர்' அளவுகோலை அடியோடு நீக்க மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும்'' என்று திருமாவளவன் வ‌லியு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

‌ திரு‌ச்‌சி‌யி‌ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் கூறுகை‌‌யி‌ல், உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கி இருக்கிற தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 ‌விழு‌க்காடு இடஒதுக்கீட்டை அங்கீகரித்து உள்ளது. என்றாலும் `கிரீமி லேயர்' எனும் பொருளாதார அளவு கோலையும் இன்னொரு புறம் திணித்து உள்ளது. இது சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் ஆகும். எனவே கிரீமி லேயர் என்னும் பொருளாதார அளவு கோலை அனுமதிக்க கூடாது என இந்திய அரசை வற்புறுத்துகிறோம்.

இதில் உச்சநீதிமன்றம் தலையிடாதவாறு தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு இயற்ற வேண்டும்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக தேர்தலை காரணம் காட்டி தள்ளிப்போட்டாலும் திட்டமிட்டவாறு அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாடு குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவு படுத்தவேண்டும். மவுனம் சாதிப்பது தமிழர்களின் நலனுக்கு எதிராக போய்விடும்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தள்ளிப்போடுகிறோம் என அரசு எடுத்த முடிவு அரசியல் ரீதியாக சரியான முடிவு என கருதப்பட்டாலும் தமிழர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாகவே கருத நேரிடுகிறது எ‌ன்று ‌திருமாவளவன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments