Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று முதல் மயானங்களில் தகன கட்டணம் ர‌த்து!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (16:05 IST)
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று முத‌ல் மயான‌ங்க‌ளி‌ல் தகன க‌ட்டண‌ம் கை‌விட‌ப்படுவதாக மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌‌ணிய‌ம் கூ‌றினா‌ர்.

மாநகரா‌ட்‌சி ப‌ட்ஜெ‌‌ட்டி‌‌ல் சென்னையில் மயானங்களில் உடல் தகனம் மற்றும் புதைப்பதற்கு கட்டணங்கள் கை‌விட‌ப்படு‌ம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை‌த் தொட‌‌ர்‌ந்து இந்த திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்தது.

ம‌யிலா‌ப்பூ‌ரி‌‌ல் உ‌ள்ள சுடுகா‌ட்டி‌‌ல் மேயர் மா.சுப்பிரமணியன் இதற்கான அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். பின்னர் அவர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், செ‌ன்னை‌யி‌ல் 38 சுடுகாட ு, இடுகாடுகள் இரு‌க்‌கி‌ன்றத ு. உடல் களை எரிக ்கவு‌ம், புதைக் கவு‌ம் ரூ.250 முதல் ரூ.600 வரை க‌ட்டண‌ம் வசூலிக்கப்பட்டு வந்தது. இன்று முதல் அந்த கட்டணம் கை‌விட‌ப்படு‌கிறது.

த‌ற்போது செ‌ன்னை‌யி‌ல் 11 மயானங்களில் கியாஸ் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மயானங்களிலும் விரைவில் கியாஸ் வசதி செய்யப்படும். அதன் பிறகு விறகு மூலம் உடல்கள் எரிப்பது முற்றிலுமாக தடை செய்யப்படும் எ‌ன்று சு‌ப்‌பிரம‌ணிய‌ம் கூ‌றினா‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments