Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் பேரு‌ந்துக‌ள் த‌னியா‌ர்மய‌ம் ஆகாது: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (17:13 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் பேரு‌ந்து‌‌ப ் போ‌க்குவர‌த்த ு த‌னியா‌ர்மய‌ம ் ஆகாத ு எ‌ன்ற ு ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி அ‌றி‌வி‌த்தா‌ர ்.

ச‌ட்ட‌ப ் பேர‌வை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ம ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் பேரு‌ந்த ு போ‌க்குவர‌த்து‌த ் த‌னியா‌ர்மய‌ம ் தொட‌ர்பாக‌க ் கடு‌ம ் ‌ விவாத‌ம ் நட‌ந்தத ு.

இ‌ந்‌ த ‌ விவாத‌த்த ை முடி‌‌‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் குறு‌க்‌கி‌ட் ட முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியதாவத ு:

ஏற்கனவே, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 100 மைல் செல்கின்ற நீண்ட தூர பேருந்துகளை மாத்திரம் அன்றைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த வெங்கட்ராமன் தேசியமயமாக்கினார்.

அதற்குப் பிறகு பேரறிஞர் அண்ணா ஆட்சி வந்த பிறகு நான் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து பிறகு துரதிருஷ்டவசமாக நம்முடைய பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு -அது கூட துரதிருஷ்டவசமாக இருக்கலாம் -நான் முதலமைச்சராக ஆன பிறகு கொண்டு வந்தது தான் பேருந்துகளை தேசியமயமாக்குகின்ற இந்தத் திட்டமாகும்.

அப்படி ஆக்கும் பொழுது டி.வி.எஸ்.காரர்களே முன் வந்து நாங்கள் பேருந்துகளை எல்லாம் தேசியமயமாக்குவதற்கு ஒத்துழைக்கிறோம் என்று கூறினார்கள்.

பொள்ளாச்சி மகாலிங்கம ், அவர்களுடைய பேருந்துகளையும் தேசியமயமாக்குவதற்கு ஒத்துழைக்கிறோம் என்று சொன்னார்கள். குடந்தை ராமன் அன்ட் ராமன் அவர்களும் சொன்னார்கள்.

பொறையாறு பேருந்து ஓனர்களும் அப்படி ஒத்துக் கொண்டு அவர்களாகவே வந்து, நாம் நடத்திய பேருந்துகளை தேசியமயமாக்குகின்ற ஒவ்வொரு விழாக்களிலும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே, யாரையும் புண்படுத்தாமல், யாரையும் நஷ்டமடைவதற்கு ஆளாக்காமல் சுமூகமான முறையில் நடைபெற்ற தேசியமயமாக்கல் கொள்கையின் வெற்றிதான் அன்றைக்கு முதன்முதலாக நாம் பேருந்துகளை தேசியமயமாக்கும் பொழுது நடைபெற்றது. அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடையிடையே, சில பேர் வதந்திகளைப் பரப்பியிருக்கலாம் -இதை மீண்டும் தேசியமயத்திலிருந்து தனியார் மயத்திற்கு கொண்டு போகிறார்கள் என்று. ஆனால், இருந்த எதிர்க்கட்சிகள் யாரும் அதற்கு இடம் தரவில்லை. அந்தக் காரணத்தினால், ஒரு நல்ல புரட்சிகரமான முடிவு எடுத்த பிறகு அதிலிருந்து கீழ் நோக்கிப் போவதற்கு எந்த அரசும் முன் வராத ு.

அதன் தொடர்ச்சிதான் இன்றளவும் இந்தப் பேருந்து போக்குவரத்துத் தொழில் பொதுவுடமைத் தொழிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை நாம் மறந்து விடக் கூடாது. பதினான்கு அல்லது பதினைந்து போக்குவரத்துக்களை ஒரே நிலையிலே கொண்டு வந்து ஒரே நிறுவனமாக ஆக்கி போக்குவரத்துக் கழகம் என்ற ஒரு துறையை ஏற்படுத்தியது தி.மு.க.அரசு என்பதையும் மறந்து விடக் கூடாது.

இ‌வ்வாற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments