Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌‌னி‌ன் உ‌யிரை கா‌ப்பா‌ற்றவே இ‌ந்த முடிவு: கருணா‌நி‌தி விளக்கம்!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (16:04 IST)
க‌ர்நாடகா‌வி‌ல் வாழு‌ம் த‌மிழ‌ர்க‌ளி‌ன் உ‌யி‌‌ர்களையு‌ம ், உடைமைகளையு‌ம் கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம ். அவ‌ர்க‌ள் வ‌ன்முறை‌க்கு ப‌லியா‌கி‌விட‌க் கூடாது எ‌ன்பதா‌ல்தா‌ன் ஒரு த‌மிழ‌ன் எ‌ன்ற உண‌ர்வோடு இ‌ந்த முடிவை அ‌றி‌வி‌க்க நே‌ர்‌ந்தது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை தலைமை‌ச் செயல‌க‌த்‌தி‌ல் இ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம ், கனிமொழிக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வெளியிட்டீர்கள் என்று ஜெயலலிதா கூறி இருக்கிறாரே? எ‌ன்ற கே‌‌ள்‌வி கே‌ட்டன‌ர ். இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த முத‌ல்வ‌ர ், “‌க‌னிமொ‌‌ழி‌க்கு அமை‌ச்‌ச‌ர் பத‌வியை க‌ர்நாடக அரசா‌ங்கமா கொடு‌க்கு‌ம ்? அத‌ற்கான அ‌திகார‌ம் அவ‌ர்களு‌‌க்கா உ‌ள்ளது? இ‌ப்படி‌க்கு பதிலுக்கு பதில் சொல்லி மண்ணை வாரி தூற்ற விரும்பவில்ல ை ” எ‌ன்றா‌ர்.

கேள்வி நேரத்திற்கு முன்பே ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர 56-வது விதி இருக்கிறது என்று ஜெயலலிதா கூறுகிறாரே? எ‌ன்று கே‌ட்டத‌ற்க ு, கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்றால் முன்னதாகவே அவையில் தீர்மானம் கொண்டு வந்து எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் முடியாது என்றால் கூட அது நிறைவேறாது எ‌ன்றா‌ர்.

க‌ர்நாடக தே‌ர்தலை மன‌‌தி‌ல் கொ‌ண்டு தா‌ன் ‌நீ‌ங்க‌ள் செய‌ல்ப‌ட்டதாக கூற‌ப்படு‌கிறத ே? எ‌ன்ற கே‌ள்‌வி‌க்க ு, “ஒகேன‌க்க‌ல் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம் க‌ர்நாடக தே‌ர்தலு‌க்கு‌ம் எ‌ந்த ச‌ம்ப‌ந்தமு‌ம் இ‌ல்லை. நா‌ன் எ‌ன் த‌மிழனை ப‌ற்‌றிதா‌ன் கவலை‌ப்படு‌கிறே‌‌ன். அவ‌ன் அடிபட‌க் கூடாது எ‌ன்பதுதா‌ன் எனது நோ‌க்க‌ம ். இ‌த்‌தி‌ட்ட‌த்தை பொறு‌த்த அள‌வி‌ல் இது ஏ‌ற்கனவே இறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌தி‌ட்ட‌ம். பொதுவாக இரு மா‌நில‌ங்க‌ளிலு‌ம் அமை‌தி ஏ‌ற்பட வே‌ண்டு‌ம்.

க‌ர்நாடக‌த்‌திலும ், த‌மிழக‌த்‌திலும் உ‌ள்ள இளைஞ‌ர்க‌ள் ர‌த்த‌ம் சி‌ந்த‌க் கூடாது. அமை‌தி ஏ‌ற்பட வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் இ‌ந்த முடிவை எடு‌த்தே‌ன். இ‌ப்போதைய சூ‌ழ்‌நிலை‌யி‌ல் கலவர‌த்‌தி‌ற்கு ‌விதை ஊ‌ன்ற‌ப்‌ப‌ட்டிரு‌க்‌கிறது. க‌ர்நாடக தே‌ர்த‌லி‌ல் வா‌க்க‌ளி‌ப்போ‌ர ், வே‌ட்பாள‌ர்க‌ள ், தே‌ர்த‌லி‌ல் ப‌ணிபு‌ரிவோ‌ர் ஆ‌கியோ‌ரி‌ன் பாதுகா‌ப்பு கே‌ள்‌வி‌க்கு‌றியா‌கி உ‌ள்ளது. ஏ‌ற்கனவே த‌மி‌ழ ், த‌மிழ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ஒ‌வ்வாமையுட‌ன் க‌ர்நாடக‌த்‌தி‌ல் ‌சில‌ர் செய‌ல்ப‌ட்டு வரு‌கிறா‌ர்க‌ள். எனவ ே, அ‌ங்கு வாழு‌ம் த‌மிழ‌ர்க‌ளி‌ன் உ‌யி‌‌ர்களையு‌ம ், உடைமைகளையு‌ம் கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம ்.

அவ‌ர்க‌ள் வ‌ன்முறை‌க்கு ப‌லியா‌கி‌விட‌க் கூடாது எ‌ன்பதா‌ல்தா‌ன் ஒரு த‌மிழ‌ன் எ‌ன்ற உண‌ர்வோட ு, ஒரு இ‌‌ந்‌திய‌ன் எ‌ன்ற பர‌ந்த நோ‌க்‌க‌த்‌தி‌ல் இ‌ந்த முடிவை அ‌றி‌வி‌க்க நே‌ர்‌ந்தது. ஆனா‌ல் இதனை த‌மி‌ழ்நா‌ட்டு‌க்கு நா‌ன் செ‌ய்த துரோக‌ம் எ‌ன்று ‌சில‌ர் கூ‌றி வரு‌கிறா‌ர்க‌ள ். துரோக‌த்‌திலேயே ‌திளை‌த்த அ.இ.அ.‌தி.மு.க.வு‌ம ், துரோக‌த்‌தி‌ன் அ‌ரி‌ச்சுவடி கூட படி‌க்காத ம.‌தி.மு.க.வு‌ம் இ‌ப்படி அ‌றி‌க்கை ‌விடு‌கிறா‌ர்க‌ள ்” என்று கூறினார்.

ஒகேனக்கல் திட்டத்தை நீங்கள்கைவிட்டு விட்டதாக ஜெயலலிதா கூறுகிறாரே? எ‌ன்ற கேள்விக்க ு, “கையும் இருக்கிறது திட்டமும் இருக்கிறது. இந்த திட்டம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டத ு ” எ‌ன்றா‌ர ்

காங்கிரஸ் சதி செய்து தேர்தல் லாபம் அடைவதற்காக உங்களை பயன்படுத்தி இருப்பதாக எடியூரப்பா கூறி இருக்கிறாரே? எ‌ன்ற கே‌ள்‌‌‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த முத‌ல்வ‌ர ், “இது நிஜமில்லப்ப ா ” எ‌ன்றா‌ர்.

ரஜினியின் பேச்சுக்கு கர்நாடகத்தில் கண்டனம் எழுந்து உள்ளதே? எ‌ன்று கே‌ட்டபோத ு, இத‌ற்கு ரஜினி பதில் சொல்லி விட்டார் எ‌ன்றா‌ர்.

ம‌த்‌திய அரசு மவுன‌ம் ஏ‌ன ்?

ஒகேனக்கல் திட்டம் குறித்து சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இர‌ண்டு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் மத்திய அரசு மவுனமாக இருக்கிறதே? எ‌ன்று கே‌ட்டபோத ு, மத்திய அரசுக்கு மவுனமாக இருப்பது எப்போத ு, வாய் திறப்பது எப்போது என்பது தெரியும். காத்திருப்போம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

வெளிநாட்டு உதவி பெறாமல் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம் என்று ராமதாஸ் கூறி இருக்‌கிறார ே? எ‌ன்ற கே‌ள்‌வி‌க்க ு, வெளிநாட்டு உதவி பெறாமல் நிறைவேற்றும் திட்டங்கள் இருந்தால் அத்துடன் இதையும் சேர்த்துக் கொள்ளலாம் எ‌ன்று ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர் முத‌ல்வ‌ர்.

செ‌ய்‌தியை ந‌ம்ப வே‌ண்டு‌ம ்!

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடருவேன் என்று கூறி இருக்கிறாரே? எ‌ன்று கே‌ட்டபோத ு, எ‌ஸ்.எ‌‌ம்.கிரு‌ஷ்ணா என்னுடன் தொலைபேசியில் பேசும் போது, இ‌ந்த செ‌ய்‌தியை ‌‌நீ‌ங்க‌ள் ந‌ம்ப வே‌ண்டா‌ம ். நா‌ன் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் செ‌ல்ல‌ப்போவ‌தி‌ல்லை என்று கூறினார் என முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தெரிவித்தார்.

சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம ்” என்று முன்னாள் முதல்வர் கிருஷ்ணா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments