Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்றும் து‌ணிவ‌ற்ற அரசு இது: ஜெயல‌லிதா கடும் தாக்கு!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (13:54 IST)
'' ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை நிறைவேற்றக்கூடிய துணிவு இல்லாத அரசாக ‌தி.மு.க. அரசு உள்ளத ு'' எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று ஒகேனக்கல் குடி‌நீ‌ர் திட்டப ் பிரச்சனை கு‌றி‌த்து பேசுவத‌ற்கு அனும‌தி மறு‌க்க‌ப்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து எதிர்க்கட்சித ் தலைவர ் ஜெயலலித ா தலைமையில் அ.இ. அ. த ி. ம ு. க உறுப்பினர்கள ் பேரவை‌யி‌ல் இருந்த ு வெளிநடப்ப ு செய்தனர ்.

அவையை ‌வி‌ட்டு வெ‌ளியே வ‌ந்த ஜெயல‌லிதா செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்ட ி:

40 வருடங்களுக்கு முன்பு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பெருந்தலைவர் காமராஜரால் திட்டமிடப்பட்டது. 1965-ல் இதற்கான திட்டம் தீட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது 1986-ல் ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு குடி‌நீ‌ர் திட்டத்தை செயல்படுத்த முன் வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் கருணாநிதி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மா‌ர்‌ச் 16ஆ‌ம் தே‌தி கர்நாடக முன்னாள் முதலமை‌ச்ச‌ர் எடியூரப்பா இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒகேனக்கல்லில் போராட்டம் நடத்தினார். ஆனால் 10 நாட்கள் ஆகியும் தமிழக அரசு இது பற்றி கண்டு கொள்ளவில்லை.

ஒகேனக்கல்லில் அ.இ.அ.தி.மு.க. போராட்டம் நடத்திய அதே நாளில் சட்ட‌ப் பேரவை‌யி‌ல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றப்போவதாக அறிவித்தார். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மீண்டும் ஏ‌ப்ர‌ல் 1ஆ‌ம் தே‌தி சட்ட‌ப் பேரவை‌யி‌ல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

த‌ன்‌‌னி‌ச்சையாக ‌நிறு‌த்‌தி வை‌த்து‌ள்ளா‌ர ்!

பின்னர் நடந்த பொதுக்கூட்டங்களிலும், சட்ட‌ப் பேரவை‌யி‌லு‌ம் முதல்வர் பேசும் போது, என்ன நடந்தாலும் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். என் எலும்பை உடைத்தாலும் திட்டம் நிறைவேறும் என்று கருணா‌நி‌தி பேசினார்.

ஆனால் ஏ‌ப்ர‌ல் 5ஆ‌ம் தே‌தி அன்று யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சட்ட‌ப் பேரவைத் தொடர் நடந்துகொண்டிருக்கையிலேயே எதிர்க்கட்சிகளை கலந்து பேசாமல் தன்னிச்சையாக திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். முதலில் திட்டம் பற்றி அறிவிக்கும் போது எதிர்க்கட்சிகளின் உதவியை நாடினார். ஆனால் திட்டம் நிறுத்தப்பட்டதாக அறிவித்த போது யாரையும் கலந்து ஆலோசிக்க வில்ல ை.

கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவிக்கு வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த திட்டத்துக்கு ஒப்புதல் பெறலாம் என்று நம்புவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். அந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டது. எனவே இத்திட்டதை நிறைவேற்றுவதற்கும், புதிய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

து‌ணிவு இ‌ல்லாத அரச ு!

கர்நாடகத்தில் அமைய இருக்கும் புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று முதலமைச்சர் கூறுவது அர்த்தமற்றது. அதற்கு அவசியம் இல்லை. கடந்த 1ஆ‌ம் தேதி இந்த திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று சட்ட‌ப் பேரவை‌யி‌ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 5ஆ‌ம் தேதி தன்னிச்சையாக திட்டத்தை நிறுத்தி வைப்பதாக கருணாநிதி அறிவித்தார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு தரமான குடிநீர் வழங்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதை நிறைவேற்ற துணிவு இல்லாத அரசாக இந்த அரசு உள்ளது. இதனா‌ல் இந்த அரசு பதவி விலக வேண்டும். அரசியலில் உறுதி, தைரியம் கொண்ட அரசால் மட்டுமே இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற முடியும் எ‌ன்று ஜெயல‌‌லிதா கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments