Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ம‌க்களை வ‌‌ஞ்‌சி‌த்து ‌வி‌ட்டா‌ர் கருணா‌நி‌தி: வைகோ கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (13:47 IST)
ஒகேன‌க்க‌ல் ‌விவகார‌த்‌தி‌ல் தனது சொ‌ந்த லாப‌த்‌தி‌ற்காக‌த் த‌‌‌மிழக ம‌க்களை‌க் கருணா‌நி‌தி வ‌ஞ்‌சி‌த்து ‌வி‌ட்டா‌ர் எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றி உ‌ள்ளா‌ர்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் ம.தி.மு.க. சார்பில் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பே‌சிய வைகோ, " வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்தது போல் முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு உள்ளத ு" எ‌ன்றா‌ர்.

" கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வருவதையொட்டி, அந்த மாநில பாஜக தலைவர் எடியூரப்பா வெறி உணர்வை தூண்டி விடுகிறார். இந்த நிலைக்கு த‌மிழக முதல்வர் கருணாநிதியின் அணுகுமுறையே காரணம். பேரு‌ந்த ுகளை உடைத்தாலும், எலும்புகளை உடைத்தாலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கூறியது தவறு.

அதனால்தான், கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் உள்ள கன்னடர்கள் யாரும் தாக்கப்படவில்லை. முதல்வர் கருணாநிதி ஆத்திரமூட்டும் வகையில் பேசியதைத் தொடர்ந்துதான் பிரச்னை கிளம்பியது. அதன்பிறகு, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவை விட்டு, தாம் ஒன்றுமே சொல்லவில்லை என்கிறார ்" எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

சட்டப் பேரவையில் ஒகேனக்கல் திட்டம் குறித்து தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, தற்போது திடீரென அந்தத் திட்டத்தை ஒத்திவைத்ததாக அறிவித்ததற்கு காரணம் என்ன? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌‌ப்‌பிய வைகோ, கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்னையில் இருமாநில மக்களிடையே பகை வளரும் என்பது நியாயம் இல்லை எ‌ன்றா‌ர்.

நம்முடைய தண்ணீரைப் பங்கிடுவதற்து நமக்கே உரிமையில்லையா? தொடர்ந்து ஒவ்வொரு உரிமையாக நாம் இழந்து வருகிறோம். முதல்வர் கருணாநிதி சொந்த லாபத்துக்காக தமிழக மக்களை வஞ்சித்துவிட்டார் என்றார் வைக ோ.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments