Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது கால்வாயில் கப்பல் சோதனை ஓட்டம்: டி.ஆர்.பாலு!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (11:39 IST)
சேது சமுத்திர கால்வாயில் சோதனை ஓட்டமாக கப்பல் விடப்படும் எ‌ ன்ற ு மத்திய அமை‌ச்‌ச‌ர ் டி.ஆர்.பாலு கூறியு‌ள்ளா‌ர ்.

ஆவடி அ‌ண்ண ா ‌ சில ை அருக ே நட‌ந் த தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட் ட‌ த்‌தி‌‌ல ் மத்திய அமை‌‌ச்ச‌ர ் டி.ஆர்.பாலு பேசுகை‌யி‌ல ், சேது சமுத்திர திட்டத்தை 6-வது வழித்தடத்தில் செயல்படுத்த பா.ஜனதா அரசுதான் அனுமதி வழங்கியது. அதன்பின்னர் 2005-ம் ஆண்டு ஜுலை மாதம் 2-ந் தேதி இந்திய பிரதமர் மன்மோகன்சிங், சேது சமுத்திர திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது இந்த திட்டத்தை எதிர்க்காதவர்கள், 2 வருடம் கழித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். உச்ச நீதிமன்றம், ராமர் பாலம் இருந்ததாக சொல்லப்படும் இடத்தில் மட்டும் ஆழப்படுத்த தடை விதித்து, மற்ற இடங்களில் ஆழப்படுத்த அனுமதி வழங்கியது.

இப்போது பாக் ஜலசந்தியில் கடலை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலில் எத்தனை அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் ஏ‌ப்ர‌ல ் 15 ஆ‌ம ் தேதி மனுதாக்கல் செய்ய வேண்டும்.

அதற்காக சேது சமுத்திர கால்வாயில் சோதனை ஓட்ட கப்பல், இ‌ன்னு‌‌‌ம் இரு ‌தின‌ங்க‌ளி‌ல் விடப்பட உள்ளது. ஏறத்தாழ 32 அடி ஆழம் கடலில் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 4 அடிதான் தோண்ட வேண்டும்.

மக்கள் வரிப்பணத்தில் ஒரு திட்டம் முழுஅளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலர் பெயருக்காக, தன்னுடைய புகழுக்காக சேது சமுத்திர திட்டம் நடைபெற கூடாது என நினைக்கிறார்கள். 100 ஆண்டு கனவு திட்டமான சேது சமுத்திர திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பும் திட்டத்துக்கு சாதகமாக அமையும் எ‌ன்ற ு அமை‌ச்‌ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments