Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட டி.வி சேனல்களுக்கு தடை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (12:53 IST)
தற்போது எழுந்துள்ள ஒகேனக்கல் பிரச்னை தீரும் வரை கன்னட மொழி சேனல்களை ஈரோடு மாவட்டத்தில் ஒளிபரப்புவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர் நலச்சங்க நிர்வாக குழு அவசர கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

சங்க தலைவர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியத ு, தமிழக அரசும், கர்நாடகா அரசும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இத்திட்டம் நடக்கிறது. ஒப்பந்தத்தை மீறி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக, கர்நாடகாவில் ஒரு சில இன மற்றும் மத வெறியர்களால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கர்நாடகாவில் உள்ள தமிழர்களை தாக்குவதோடு, அவர்களது சொத்துகளை சேதப்படுத்தும் கன்னட இன வெறியர்களை கண்டித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும் வரை கன்னட மொழி சேனல்களான துர்தர்ஷன் கன்னடம், உதய் டிவி, யுடிவி போன்றவற்றை ஈரோடு மாவட்டத்தில் ஒளிபரப்புவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments