Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா பேருந்துகள் தமிழத்திற்கு வருவது நிறுத்தம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (12:42 IST)
இன்று சென்னையில் தமிழ் நடிகர் மற்றும் நடிகைகள் உண்ணாவிரதம் இருப்பதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் கர்நாடகா அரசு பேரு‌ந்து கள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒக்கனேக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த கோரியும் ஒக்கனேக்கல் பகுதி கர்நாடகா மாநிலத்திற்கு சொந்தம் என கூறி கர்நாடகா மாநில கன்னட அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சியினர் பிரச்சனை ஏற்படுத்தினர். இதனால் கடந்த திங்கட்கிழமை கர்நாடகா மாநிலத்தில் தமிழ் படம் ஓடிய திரையரங்குகளை அடித்து நொறுக்கினர். தமிழக பேருந்துகளையும் தாக்கினர்.

இதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கர்நாடகா அமைப்புகளுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனால் இரு மாநிலங்களிலும் பதட்டம் ஏற்படும் சூழல் உருவானது. காவிரி பிரச்சனையை தொடர்ந்து கர்நாடகாவில் புதிய அரசியல் ஆயுதமாக ஒக்கனேக்கல் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர் கர்நாடகா மாநில அரசியல்வாதிகள்.

இந்த நிலையில் கர்நாடகா எல்லை வரையிலும் பதட்டம் இல்லாத பகுதி வரையிலும் தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா அரசு பேருந்துகள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் வந்து சென்றது. இந்த நிலையில் இன்று இந்த பிரச்சனையை கண்டித்து தமிழக நடிகர் மற்றும் நடிகைகள் உண்ணாவிரம் இருப்பதால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கர்நாடக மாநிலத்தில் இந்த உண்ணாவிரத்திற்கு எதிர்ப்பு நிலவுவதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சில தனியார் பேருந்துகள் மட்டும் எல்லைவரை சென்றுவருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் பேருந்துகள் தலமலை வழியில் இயக்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments