Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட அமைப்பினரை கண்டித்து உண்ணாவிரதம்: ர‌ஜி‌னி, கம‌ல் உ‌ள்பட 10,000 பேர் பங்கேற்பு!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (09:29 IST)
கர்நாடகாவில், தமிழ் படங்களை திரையிட்ட சினிமா தியேட்டர்களை கன்னட வெறியர்கள் தாக்கியதை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் இன்ற ு உண்ணாவிரத போராட்டம் ந ட‌ந்து வரு‌கிறது. இதில், ரஜினிகாந்த ், க ம‌ல ்ஹாசன் உள்பட 10 ஆயிரம் பேர் கலந்துக ொ‌ண்டு‌ள்ளன‌ர்.

தமிழகத்தின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கூறி, கர்நாடக மாநிலத்தில் கன்னட வெறியர்கள் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை ‌ நி‌க‌ழ்வுக‌ள் நடத்தி வருகிறார்கள். தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் தாக்கப்பட்டன. தமிழ் அமைப்புகள் அனைத்தையும் தாக்கி வருகிறார்கள்.

கன்னட வெறியர்களின் இந்த தாக்குதலை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை 8 மணிக்கு, தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதம் தொடங ்‌கியது. நடிகர்கள் ரஜினிகாந்த ், கமலஹாசன் உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற ்று‌ள்ளன‌ர ். மாலை 5 ம‌ணி வரை உ‌ண்ணா‌விரத‌ம் நடைபெறு‌‌கிறது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து க ொ‌ண்டு‌ள்ளன‌ர். தமிழ் திரையுலகை சேர்ந்த சுமா‌ர் 10,000 பேர் இந்த உண்ணாவிரதத்தில் பங்க ே‌ற்று‌ள்ளன‌ர்.

உண்ணாவிரத போராட்டத்தையொட்டி, தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப் ப‌ட்டு‌ள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் அனைத்திலும் இன்று காலை காட்சி, பகல் காட்சி ஆகிய 2 காட்சிகள் ரத்து செய்யப் ப‌ட்டு‌ள்ளன.

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளும் நடிகர்-நடிகைகளுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க 5,000 காவல‌‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

Show comments