Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌ர்களு‌க்கு எ‌திரான வ‌ன்முறை‌களை இரு‌ம்பு‌க்கர‌ம் கொ‌ண்டு ஒடு‌க்க வே‌ண்டு‌ம்- ‌விஜய டி.ராஜே‌ந்த‌ர்!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2008 (19:38 IST)
க‌ர்நாடக‌‌த்‌தி‌ல் த‌மிழ‌ர்களு‌க்கு எ‌திராக நட‌ந்துவரு‌ம் வ‌ன்முறைகளை இரு‌ம்பு‌க்கர‌‌ம் கொ‌ண்டு ஒடு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்று லட்சிய தி.மு.க.பொதுச் செயலர் விஜய டி.ராஜேந்தர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற ி‌ய ிருப்பதாவது:

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குடிநீர் தேவைக்காக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தமிழக அரசால் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் தமிழகம ், கர்நாடகத்துக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையைக் கையிலெடுத்துக்கொண்டு தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு செல்லும் ப ேர ுந்துகளுக்கு பெருஞ்சேதம் விளைவிப்பது, பயணிகளை சிறைபிடிப்பது, தமிழ ்‌த் ‌திரை‌ப் படங்கள் ஓடும் திரையரங்குகளைக் தாக ்க ுவது, பேனர்களை கிழிப்பது, தமிழ் சங்கப்பலகையை போட்டு உடைப்பது போன்றவை ஜனநாய கரீதியில் நடைபெறும் சம்பவங்களாகத் தோன்றவில்லை. இத ுபோன்ற வன்முறை சம்பவங்களை இரும்ப ு‌க ்கரம் கொண்டு அரசு அடக்கவேண்டும்.

கர்நாடகம் காவிரி நீரைத் தங்களுக்கு பயன்படுத்தியது போக மிச்ச மீதியைத்தான் தமிழ்நாடு குடிநீருக்காகவும் பாசனத்திற்காகவும் பயன்படுத்துகிறது. காவிரியில் தண்ணீர் ஒகேனக்கல் அருவியாய் கொட்டினாலும் கொட்டட்டும்.. தமிழர்களுக்கு அது குடிநீராய் நம் வீடுகளில் கொட்டக்கூடாது. மாறாக தமிழர்களின் கண்களில் கண்ணீர் அருவியாய்க் கொட்ட வேண்டுமெனக் கறுவிக்கொண்டு... கங்கணம் கட்டிக்கொண்டு கர்நாடகத்தினர் செயல்படுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

கர்நாடகத்தினர் பயன்படுத்தியது போக பக்கத்து மாநிலத்துக்காரன் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கிடைக்க கூடாது என்று நினைப்பதென்பது கன்னடர்களின் குறுகிய மனப்பான்மையைத்தான் காட்டுகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்குகளுக்காக ஒரு நாடகம் நடத்துகிறதோ கர்நாடகம்!

கன்னட அமைப்பினர் கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிகிறார்கள்.

கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்லாயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். இதுவரை அந்த கன்னட தோழர்களுக்கு எங்களால் எந்தவித பங்கமோ, பாதிப்போ ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றதில்லை.

அது எங்களின் பண்பு, தமிழர்களின் பண்பாடு, அதற்காக எங்களை கோழைகள் என்றோ... வீரமில்லாதவர்கள் என்றோ கருதிவிட வேண்டாம். எங்களுடைய வீரத்தை புற நானூறு பறைசாற்றும் எங்களது வீரத்திற்கு எல்லை என்பதே இல்லை ஆனால் பொறுமைக்கு உண்டு எல்லை.

அதனால்தான் கன்னட அமைப்பினர் சிலருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். தமிழர்களாகிய எங்களுக்கு நாங்களே போட்டு கொண்டிருக்கும் பொறுமையெனும் பூட்டை உடைத்து விடாதீர்கள். தேசிய ஒருமைப்பாட்டை குலைத்து விடாதீர்கள். பெருமைக்குரிய இந்திய நாட்டை சிதைத்து விடாதீர்கள். ஒற்றுமை எனும் கூட்டைக் கலைத்து விடாதீர்கள் என கடுமையாக எச்சரிக்கையுடன் கூடிய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.2000… ரூ.1000… ரூ.0.. குறைந்து கொண்டே வரும் பொங்கல் பரிசுத்தொகை..!

பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை! ஆப்கனில் தலிபான் அரசு உத்தரவு..!

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

Show comments